மக்களிசை பாடகி ராஜலட்சுமி செந்தில் கதை நாயகியாக அறிமுகமாகும் “லைசென்ஸ்” படத்தில் மொத்த பாடல்களையும் எழுதி அசத்தியிருக்கிறார் ஏ.ரமணிகாந்தன்

மக்களிசை பாடகி ராஜலட்சுமி செந்தில் கதை நாயகியாக அறிமுகமாகும் “லைசென்ஸ்” படத்தில் மொத்த பாடல்களையும் எழுதி அசத்தியிருக்கிறார் ஏ.ரமணிகாந்தன்

 

கணபதி பாலமுருகன் இயக்கத்தில், பிரபல பாடகி செந்தில் ராஜலட்சுமி கதை நாயகியாக அறிமுகமாகும் முதல் படத்தில் ஒரு பாடல் எழுத தொடங்கியவருக்கு மொத்த பாடலையும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர்.

 

வர்ணாஸ்ரமம் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வெளிப்படுத்தியவர் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன்.

வீரஜாம்புகன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றவர்.

படத்தில் 9 நிமிட வீரஜாம்புகன் பாடலை ஒரே சிங்கிள் டேக்கில் சொந்த குரலில் பாடி அசத்தினார்.

 

இவர் தற்போது கெலைடாஸ்கோப், கொட்டாச்சி இயக்கத்தில் கழுமரம், அடங்காமை, அக்கினி குஞ்சொன்று கண்டேன், ஊர் உலா, கடவுளுக்கும் தெரியுமப்பா போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார்.

 

மேலும் திருக்குறளின் 1330 குறளையும் அதன் பொருள் அடிப்படையில் திரைப்பாடல் வடிவில் மெல்லிசை பாடல்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன்.

Faceinews.com