“ஆர்யமாலா” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஜனா ஜாய் மூவீஸ் சார்பாக வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஆர்யமாலா”.

இது பெண்களையும், பெண்களுக்கான பிரச்சனையையும் கதைக்கருவாக கொண்டு பேசும் படம். காலகாலத்தில், பெண் என்பவள் பூப்பெய்துவது வழக்கம். இங்கு நாயகிக்கு தள்ளிப் போகிறது. நாயகியின் தங்கை அக்காவை முந்தி பருவமடைகிறாள்.

இதனால், இன்னும் மன அழுத்தம் அதிகமாகிறது. ஊர் பேச்சுக்கு ஆள் ஆகிறாள். வயதிற்கு வரும் முன்பே தன் கனவில் ஒருவரை காதல் கொள்கிறாள். தன் கனவில் வந்தவரை நிஜத்தில் காண்கிறாள்.

பருவ வயதை அடைந்ததும் இன்னும் பருவம் வராதது மேலும் இவளை பாதிக்கிறது. பார்த்த வைத்தியமும் சமயத்திற்கு கை கொடுக்க மறுக்கிறது.

இவள் காதல் கேள்விக்கு, திருமண ஆசைக்கு தீர்வு கிடைத்ததா? வெள்ளித்திரையில் விடை காண்க.

மனிஷா ஜித் நாயகியாக முழுப்படத்தையும் தன் தோள்களில் சுமந்து இருக்கிறார். இவருக்கு துணையாக அவரது அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள எலிசபெத் தன் அனுபவ நடிப்பின் மூலம் உதவியுள்ளார். தங்கையாக இரண்டாவது நாயகி சிறப்பாக நடித்துள்ளார் ஆரம்பத்தில் இவர் தான் நாயகி என்று சொல்லும் விதம் பாடலுக்கு நடனமாடி இளைஞர்களை கவர்கிறார்.

“பிச்சாங்கை” பட புகழ் ஆர் எஸ் கார்த்திக் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக, கூத்துக்கலைஞராக காத்தவராயன் வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். நாயகனுக்கு உரிய அத்தனை அம்சமும் இவரிடம் உள்ளது. நடிகர்கள் “களவாணி” விமல், “நான் அவன் இல்லை” ஜீவன் இவர்களை நியாபகம் படுத்துகிறார்.

நாயகியின் முறைமாமனாக வரும் படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் யுவன் நன்றாக நடித்துள்ளார். மறைந்த நடிகர்கள் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், இயக்குனர் மாரிமுத்து, தவசி அற்புதமாக நடித்து படத்திற்கு சிறப்பு செய்துள்ளனர். வேல்முருகன் – ஜாஃபர் நடிப்பும் அருமை.

ஒரு பெண்ணின் வலியை அற்புதமாக வெளிக்கொண்டு தன் வசனம் மூலம் அனைவரையும் கட்டிப்போட்ட R.S. விஜய பாலாவிற்கு நிச்சயம் சபாஷ் போடலாம். புதிய கிராமத்து பின்னணி காட்சிகள் பல இப்படத்தில் வருகிறது ரசிக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவு ஜெய்சங்கர் ராமலிங்கம் நல்ல தரம். இசை செல்வநம்பி பாடல்கள் அனைத்தும் அருமை – பின்னணி இசை சிறப்பு. ஆதிரை பாடல்வரிகள் ஆழமானது அற்புதம்.

ஹரிஹரன் படத்தொகுப்பு மிக சிறப்பு. சிவ யோகா கலை இயக்கம் நன்றாக இருந்தது. தஸ்தாவின் நடன இயக்கம் சிறப்பு.

இளையராஜா இசையில் வெளிவந்த “சின்னதாயி” படத்தின் பாதிப்பு போல், இப்படம் வேறுவிதத்தில் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நல்ல புதுவிதமான தரமான படம் “ஆரியமாலா”.

ஆர்யமாலா திரைப்பட நடிகர்கள் :-

ஆர் .எஸ் . கார்த்திக்

மனிஷாஜித்

எலிசபெத்

சிவசங்கர்

ஜேம்ஸ் யுவன்

தவசி

மணிமேகலை

ஜாபர்

வேல்முருகன்

மாரிமுத்து

ஆர்யமாலா திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் :-

தயாரிப்பு : வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்)

ஒளிப்பதிவு : ஜெய்சங்கர் ராமலிங்கம்

இசை : செல்வநம்பி

திரைக்கதை, வசனம் , இணை இயக்கம் : R.S. விஜய பாலா

படத்தொகுப்பு : ஹரிஹரன்

கலை : சிவ யோகா

ஸ்டண்ட் : மிரட்டல் செல்வா , வீரா

நடனம் : தஸ்தா

ஆடை : சாவிஸ். S

நிழற்படம் : கார்த்திக் , ஜெயராம்

போஸ்டர் டிசைனிங் : செல்வா

VFX : விஜய் பாபா , P&P

கலரிஸ்ட் : கார்த்திக்

ஒலிப்பதிவு கூடம் : AVM G STUDIO – ஐயப்பன்

தயாரிப்பு மேற்பார்வை : ஹென்றி குமார்

மக்கள் தொடர்பு : KSK செல்வகுமார்

#aaryamalamoviereview #aaryamalamovie #aaryamalareview #aaryamala #ஆர்யமாலா #tamilmoviereview  #moviereview #review #movie #fdfs #theatre #audience #audienceopinion #theatreopinion

 

மதிஒளி ராஜா

Faceinews.com