வேடன் மீடியா நிறுவனர் – ஆசிரியர் கீமா முருகன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!

வேடன் மீடியா நிறுவனரும்  ஆசிரியருமான கீமா முருகன் அவர்களின் பிறந்தநாள் விழா

வேடன் பத்திரிக்கையின் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடுவதற்கான அறிவிப்பு விழாவும் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை நடிகர் செந்தில், ஆர்.ஆர் . பிரியாணி நிர்வாக இயக்குனர் செல்வம், நிதிநிறுவன இயக்குநர் வைரதேவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். எம்.பார்த்திபன், சமூக சேவகர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊடக நண்பர்கள் தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.

 

மேலும்,  ஆர்.ஆர்.பிரியாணி நிர்வாக இயக்குநர் செல்வம் கூறுகையில்  நான் அடிமட்டத்திலிருந்து வளர்ந்து வந்தவன். என்னுடைய பேச்சை கேட்டும், தொழில் வளர்ச்சியை கண்டும், என்னை போன்று  பலர் பின் தொடர்ந்து சென்னையில் ஒரு பிரியாணி மோகத்தை  உருவாக்கியிருக்கிறார்கள் .

தெருவோர கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வளர்ந்துள்ளது.  உணவுத்துறையில் இதை பெரிய மாற்றமாக கருதுகிறேன்.இது போல் பத்திரிகை துறையில் கி.மா.முருகன் முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

Faceinews.com