(Left to Right): Venkatesh, CFO, Wilfred Selvaraj, Chairman & Managing Director and Padma Wilfred, Director, LGT Global Hospitality Limited
நிதியாண்டு 26-ல் சிறப்பான செயல்திறனை பதிவு செய்திருக்கும் எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட்
சென்னை, 29 மே, 2026: LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (முன்பு ‘எல்ஜிடி பிசினஸ் கனெக்ஷன்ஸ் லிமிடெட்’), மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறப்பான வணிக ஒருங்கிணைப்பு மற்றும் கார்ப்பரேட், சுற்றுலாப் பிரிவுகளில் கிடைத்த வரவேற்பால் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களைச் சென்றடைதல், சேவைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம், ‘ஒருங்கிணைந்த பயண மற்றும் ஹாஸ்பிடாலிட்டி சேவை நிறுவனம்’ என்ற தனது நிலையை இந்நிறுவனம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. MICE சேவைகள், டெஸ்டினேஷன் திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் அனுபவப்பூர்வ சுற்றுலாக்களுக்கான தேவை அதிகரிப்பு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
நீண்டகால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் முக்கிய பிராந்திய சந்தைகளில் LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. நாகர்கோவில், கோயம்புத்தூர், புனே மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகர விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்தகட்டமாக அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், உலகளாவிய வாடிக்கையாளர் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் துபாய் மற்றும் மலேசியாவை மையமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆன்மீக மற்றும் சமயச் சுற்றுலாவை அதிக வளர்ச்சியடையும் பிரிவாகக் கருதி, அதில் பிரத்யேக கவனம் செலுத்துகிறது.
செயல்பாட்டு திறனில் மேம்பாடுகள்
கீழ்க்கண்ட முக்கிய வணிகப் பிரிவுகளில் நிறுவனம் தனது சேவைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது:
• கார்ப்பரேட் பயண மேலாண்மை
• MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்)
• ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள்
• சொகுசுக் கப்பல் மற்றும் ஓய்வு நேரச் சுற்றுலா
• டிக்கெட் முன்பதிவு மற்றும் விசா செயலாக்கச் சேவைகள்
• பிரத்யேக உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணப் பேக்கேஜ்கள்
• ஆன்மீக மற்றும் சமய சுற்றுலாச் சேவைகள்
• கண்காட்சிகள்
• வர்த்தக கண்காட்சிகள்
• டெஸ்டினேஷன் திருமணங்கள்
LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. வில்ஃபிரட் செல்வராஜ் கூறுகையில்: “பயணத் தேவை அதிகரிப்பு மற்றும் புதிய பயண அனுபவங்கள் மீதான ஆர்வத்தால் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பிரிவுகளில் நாங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் ஒருங்கிணைந்த பயணக் கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும். Yaja, Travflix மற்றும் Holiday One இணைப்பு எங்களின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்த முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் துபாய், மலேசியா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கி நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதில் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.


