அப்பல்லோ  மருத்துவமனை,  தமிழ்நாடு அரசு சுகாதார அமைப்புகள் திட்ட உதவியுடன் எலி  மருந்து உட்கொண்ட 17 வயது மாணவருக்கு  கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை  செய்து  உயிரைக்  காப்பாற்றி  மறு வாழ்வு  அளித்துள்ளது

GS_18615

(From Left to Right)​ ​ Dr.Karthickmathivanan, Liver Transplant Surgeon, Apollo Hospitals, Dr​.Mohammed Nayeem, Unit Head, Liver Transplant Surgeon, Apollo Hospitals, the Live donor & the Patient, (Far Right) Dr. Joy Varghese, Hepatologist and Liver transplant physician, Apollo Hospitals ​

GS_18596
Dr. Joy Varghese, Hepatologist and Liver transplant physician,  Apollo Hospitals,  Dr Mohammed Nayeem, Unit Head, Liver Transplant Surgeon,  Apollo Hospitals, Dr.Karthickmathivanan and Dr.Senthil, Medical officer, Tamil Nadu Health System Project seen along with patient.
Faceinews Logo - Copy

சென்னைமே 23:- 2018:- எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு அளித்துள்ளதுஅப்பல்லோ மருத்துவமனைகல்லீரல் நோய்கள் சிகிச்சை (ஹெப்டாலஜிநிபுணரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜாய் வர்கீஸ், யூனிட் ஹெட் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை நிபுணருமான டாக்டர். முகமது நயீம், உடனடியாக செயல்பட்டு, மாணவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள்ளாக உயிருடன்இருப்பவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு மாணவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு சுகாதார அமைப்புகள் திட்டம், டி.எம்.எஸ். அலுவலகம் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநரகம், சென்னை ஆகியவற்றின் உதவியுடன் இம்மாணவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை.

தமிழகத்தில் மரணத்தைத் தழுவும் 15 வயது முதல் 39 வயது வரை உள்ள வயது பிரிவினரில் 25 சதவீதத்தினர் பெரும்பாலும் தற்கொலை செய்து கொண்டு இறப்பதாக மத்திய சுகாதாரம்மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுகிராப்புறங்களில் தற்கொலை செய்துகொள்ளும் 10 பேரில் பேர் பூச்சி மருந்துகளை உட்கொண்டே இறக்கின்றனர்இந்தியாவில் 60 சதவீதம் மக்கள் தங்களது வாழ்வாதரத்திற்கு விவசாயத்தை சார்ந்துள்ளனர்கிராமப்புறங்களில்தான் தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் அதிகம் உள்ளதுபூச்சி மருந்துகள் பயன்பாடு கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகிறதுபல விவசாயிகள் விவசாயப் பணிகளுக்காகதங்களது இல்லங்களில் பூச்சி மருந்துகளை இருப்பு வைத்துள்ளனர்இதுபோன்ற சூழலில் அவை தற்கொலைக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றனபூச்சி மருந்துகளை உட்கொண்டுதற்கொலை செய்து கொள்வது என்பது பரவலான ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.

எலி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயல்வோரை மீட்டு அவர்களது உறவினர்கள் சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர்இதுபோல பூச்சி மருந்து உட்கொண்டவர்கள்அவசர சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதுஅது போன்ற ஒரு சம்பவமாகவிழுப்புரத்தைச் சேர்ந்த ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளதுஎன்ற 11-ஆம் வகுப்பு மாணவர் விஷம் அருந்திய அறிகுறிகளுடன்சுய நினைவற்ற நிலையில் இம்மாதத் தொடக்கத்தில்சென்னைஅப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்அந்த மாணவர் விஷம் அருந்திய பின் 4 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே அவரது நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டதுஅவசர சிகிச்சை நிபுணர்கள் அந்த மாணவரை வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசிக்க வழி செய்து பின்னர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாகமாற்றினார்கள்.

 

இது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள் சிகிச்சை மருத்துவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஜாய் வர்கீஸ் [Dr. Joy Varghese, Hepatologist, Liver Transplant Surgeon, Apollo Hospitals Chennai]  கூறுகையில், “எலிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் எலி மருந்துகள் சக்தி வாய்ந்த ரசாயனங்களைக்கொண்டதாகும்அவை அனைத்து பிராணிகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதுமனித உடலுக்குள் அது சென்றுவிட்டால் மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். உட்கொண்ட எலி மருந்தின் அளவைப் பொருத்து, அதன் பாதிப்புக்கான அறிகுறிகளும், அறிகுறிகளின் வெளிப்பாடும் தென்பட ஆரம்பிக்கும்பெரும்பாலும் எலி மருந்துகள் மனித கல்லீரலை செயல் இழக்கச் செய்கின்றன.மூளையை பாதிப்பதால் (என்சிஃபலோபதிசில சமயங்களில் சிலருக்கு கோமாவும் ஏற்பட வாய்ப்பு உள்ளதுமூளையில் நச்சுகள் படிந்தால் மூளை பாதிக்கப்பட்டு பின்னர் ஆபத்தான விளைவுகள்ஏற்படக் கூடும்மூச்சு விடுவதில் சிரமம்நெஞ்சு இறுக்கம்இருமல் போன்றவை ஏற்படக் கூடும்சிலருக்கு நுரையீரல் வீக்கம் (பல்மோனரி எடிமா), சீரற்ற இதயத் துடிப்புஇதயத் தசை நோய்(கார்டியோமயோபதி), இதயத் தசைகள் பலவீனம் அடைவது போன்ற குறைபாடுகள் சிலருக்கு ஏற்படக் கூடும்ரத்த உறவுத் தன்மையை குறைக்கும் தன்மையும் எலி மருந்துக்கு உண்டுஇதனால்உடலுக்குள் அனைத்து பாகங்களில் இருந்தும் ரத்தம் ஒழுக ஆரம்பிக்கும்அது பல்வேறு பாகங்களை பாதிக்கும்குறிப்பாக கல்லீரலை மிக அதிகம் பாதிக்கும்.” என்றார்.

மாணவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளதுகடுமையான கல்லீரல் செயல் இழப்பால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டதுஅவரது கல்லீரல் முற்றிலும் சேதம் அடைந்து இருந்ததால் அதை ஆயத்தமாக நிலைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டதுஇதற்காக சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரைஅவருக்கு பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச எனப்படும் ரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுஇதன் மூலம் நச்சுத் தன்மையின் அளவு குறைக்கப்பட்டதுகல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை ஒன்றே இந்தப் பிரச்சினைக்குத் சிறந்த தீர்வுஎனவே மாணவரின் உயிரைக் காக்க அவரது தாயார் கல்லீரலை தானமாகத் தர முன்வந்தார்அதைத் தொடர்ந்து கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டு அந்த மாணவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.” என்று அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் நயீம் [Dr. Nayeem, Liver Transplant Surgeon, Apollo Hospitals] கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனை எப்போதுமே இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய உறுதி பூண்டுள்ளதுவெற்றிகரமாக அந்த மாணவரின் உயிரை அப்பல்லோ காப்பாற்றி உள்ளதுஇந்தசிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டுள்ள வேளையில் அப்பல்லோ மருத்துவமனை குடும்பம்பூச்சி மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த விரும்புகிறதுஉயிரைப்பறிக்கும் பூச்சி மருந்துகள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதுமே கிராமப் புறங்களில் அதிக பயன்பாட்டில் உள்ளதுஅதை சிலர் தெரிந்தோ தெரியாமலோ உட்கொண்டுவிடுகின்றனர்.பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதும் பாதுகாப்பு கொள்கைகளை வகுப்பதும் உடனடியாகச் செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்இது போன்றசம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்க வேண்டும்அதற்கு எளிதில் கிடைப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பல்லோ மருத்துமனை அரசைக் கேட்டுக்கொள்கிறது.

Faceinews.com