கிரீன்சேனல் மூவிஸ் தயாரிப்பில் விண் ஸ்டார் விஜய் நடிக்கும்“மக்கள்தொடர்பாளன்” படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது..

2 sheet

Faceinews Logo - Copy

மக்கள் தொடர்பாளன் என்றால் பலருக்கு தெரியும்..சிலருக்கு தெரியாது..அரசியல், காவல்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, விளையாட்டுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை என பல்வேறு துறைகளிலும் PROக்கள் பணியாற்றி வருவது நாம் அறிந்ததே. அது போல் சினிமாத்துறையில் PRO வாக நமது நாயகன் நடித்து, தயாரித்து, இயக்கும் படம் தான் “மக்கள்தொடர்பாளன்”.

P1290078

கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நாயகன் விவசாயம் பிடிக்காமல் சினிமா மீது உள்ள ஆசையினால் எப்படியாவது ஹீரோவாக நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தினால் பஸ், டிரெயின் பிடித்து போவதை விட லாரி பிடித்து போனால் எப்படியும் ஜெயித்து விடலாம் என்கிற மங்குனி சென்டிமென்ட்டுடன் நம்ம ஹீரோ ஆவேசமாக கிளம்பி சென்னை வருகிறார்.

வந்த இடத்தில் பல சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு தேடி படிகளில் ஏறி இறங்குகிறார். இதன் இடையில் ஒரு கொலை நடக்க சந்தேகத்தின் பேரில் ஹீரோவை கைது செய்து விடுகின்றனர்.

1 (1)

வக்கீலுக்கு படிக்கும் ஹீரோயின் சஹானா தனது வாதத்திறமையினால் ஹீரோவை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து ஒருபத்திரிகையாளரின் ஆலோசனைப்படி ஹீரோ PRO ஆகிறார். இதற்குப் பிறகு இவர் சந்திக்கும் பிரச்சனைகளும், போதைப் பொருள் மற்றும் பெண்கள் கடத்தல் போன்ற குற்றங்களை செய்து வரும் டான் அருமைநாயகத்திற்கும் ஹீரோ சூர்யாவிற்கும் இடையே நடக்கும் மோதல் மேலும் ஹீரோ தனது PRO பணியைத் தொடர்ந்தாரா ?

சினிமாவில் நடித்து தனது லட்சியத்தில் வெற்றி அடைந்தாரா ?என்பதே திரைக்கதை. முடிவில் விவசாயம் செய்ய தனது சொந்த ஊருக்கே சென்றாரா ?

2

நடிகர்கள்:

ஹீரோவாக விண் ஸ்டார் விஜய்

ஹீரோயின்கள் சஹானா, மம்தா, ரித்திகா, ரேஸ்மி

வில்லன் அருமைநாயகம்

புதுமுகங்களுடன் T.P.கஜேந்திரன், அம்பிகா, நளினி, வடிவுக்கரசி மற்றும் மயில்சாமி

 

டெக்னிசீயன்ஸ்:

 

இசை – ராஜ்கிஷோர் ராவ்

ஒளிப்பதிவு – பகவதிபாலா & ராஜபாண்டி

எடிட்டிங் – மூர்த்தி & ஆனந்த்

சண்டைப்பயிற்சி – ஜாக்குவார் தங்கம், பவர்பாண்டியன்

நடனம் – ராபர்ட் சுரேஷ், ரமேஷ் ரெட்டி

பாடல்கள் – செல்வராஜ், மூக்கையா, நெல்லை பாரதி, ஜெயச்சந்திரன், பிரம்மா

ஆர்ட்டைரக்டர் – கதிர்

PRO –கிளாமர் சத்யா

 

 

Faceinews.com