டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை, கண்தானம் மீது விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தும் மனிதசங்கிலி நிகழ்வு

Pic 3

Faceinews Logo - Copy

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25-லிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு தேசிய கண்தான நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. 500-க்கும் அதிகமான நபர்கள் தங்கள் கண்களை தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு தானமளிப்பவருக்கான அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர்.

 Pic 1

சென்னை, 2018, செப்டம்பர் 3 :  கண் தானத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரு வார காலஅளவுக்கு தேசியளவில் நடத்தப்படும் 2018ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் ஒரு அங்கமாக கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க சென்னையின் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள அதன் மருத்துவமனைக்கு முன்பாக ஒரு மனிதசங்கிலி நிகழ்வை இன்று நடத்தியது.

தேசிய கண் தான விழிப்புணர்வுக்கான இருவார அனுசரிப்பு நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை இரு வார காலத்திற்கு அனுசரிக்கப்படுகிறது.

மனிதசங்கிலி நிகழ்வானதுகூடுதல் காவல்துறை தலைவர் திரு. எம்.என். மஞ்சுநாதாஐபிஎஸ்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவரான டாக்டர். அமர் அகர்வால் இந்நிகழ்விற்கு தலைமையேற்றார்.  

Pic 2

கல்லூரி மாணவர்கள்டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் & பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உட்படபல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான நபர்கள் இந்த மனிதசங்கிலி நிகழ்வில் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். கண் தானத்தின் அவசியம் மற்றும் பலன் குறித்து வலியுறுத்துகிற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பெரும் திரளாக பலர் பங்கேற்ற இந்த மனித சங்கிலி நிகழ்வானதுகண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியது. இதன் விளைவாக கண் தானம் அளிப்பதற்கான உறுதிமொழி படிவத்தில் பொதுமக்களில் பலர் ஆர்வத்தோடு முன்வந்து தங்கள் ஒப்புதலை வழங்கி கையெழுத்திட்டனர்.  டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் இந்த விழிப்புணர்வு திட்டத்தின் வெற்றியை இது சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

கூடுதல் காவல்துறை தலைவர் திரு. எம்.என். மஞ்சுநாதாஐபிஎஸ் இந்நிகழ்ச்சியை தொடங்கவைத்து பேசுகையில், “இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினைகளுள் ஒன்றாக பார்வைத்திறனிழப்பு இருக்கிறது. உலகிலுள்ள பார்வைத்திறனற்றவர்களுள் 5 நபர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில் பார்வைத்திறன் அளிப்பதற்காக தங்களது கண்களை தங்களது இறப்பிற்கு பிறகு தானமாக வழங்க எண்ணற்ற நபர்கள் ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இந்த உயரிய நோக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்,” என்று கூறினார்.

டாக்டர். அகர்வால் கண்மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் பேசுகையில்ஏறக்குறைய 46  இலட்சம் இந்தியர்கள் நிறமிலி இழைம பார்வை இழப்பால்  (corneal blindness) அவதிப்படுகின்றனர் மற்றும் உத்தேசமாக 11 இலட்சம் பார்வைத்திறனற்ற நபர்கள்  கண் தானத்தின் வழியாக பெறப்படும் மாற்றுப்பதியத்திற்காக காத்திருக்கின்றனர். ஒருவர் செய்யும் கண்தானம்இரு நிறமிழி இழைம பார்வை இழப்புள்ள நபர்களுக்கு பார்வைத்திறனை வழங்கும் என்றாலும் கண்களின் தேவைக்கும்,அளிப்புக்குமிடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தேசிய கண் தான அரைத்திங்கள் நிகழ்வு டாக்டர். அகர்வால் குழுமத்தின் கண் மருத்துவமனைகள் அனைத்திலும் அனுசரிக்கப்படுகிறது. கண்தானத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளச் செய்து பொதுமக்களை ஒரு பொது தளத்தில் ஒன்றுகூட்டுவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்திட்டங்கள்  இதில் உள்ளடங்கும்,” என்று கூறினார்.

கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை இந்த மனிதசங்கிலி நிகழ்வு ஏற்படுத்தியது. தங்களது கண்களை தானமளிப்பதற்கு 500-க்கும் அதிகமான நபர்கள் விருப்பத்துடன் முன்வந்து அதற்கான உறுதிமொழி  படிவங்களில் கையெழுத்திட்டிருக்கின்றனர் மற்றும் தானமளிப்பவர்களுக்கான அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குறித்து:

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை 1957ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கண் நோய்கள்/குறைபாடுகளுக்கு ஒரு நிறுத்த அமைவிடத்தில் தீர்வுகளை வழங்குவதற்கு ஒரு முழுமையான கண் மருத்துவமனையாக இயங்கும் இதுதொடங்கப்பட்டு 61 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 3மருத்துவமனைகளையும் மற்றும் ஆந்திர பிரதேஷ்தெலங்கானாகேரளாகர்நாடாகஒடிசாமஹாராஷ்டிரா,குஜராத்அந்தமான்மேற்குவங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மருத்துவமனைகள் கொண்டு இது இயங்கி வருகிறது. சர்வதேச அளவில் செயல்படுகின்ற நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிய முதல் நடவடிக்கையாக மொரீசியஸில் நடத்தப்பட்ட மூன்றாம் நிலை கண் பராமரிப்பு சிகிச்சை மையம் அமைந்திருக்கிறது. இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும் ஆப்பிரிக்காகிழக்கு ஆசியா நாடுகளிலும் இம்மருத்துவமனை 13 கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச அமைப்பாக தன்னை விரிவுபடுத்தியிருக்கிறது.

Faceinews.com