தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 2019 ஜீலை, ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக 3 – 8-19 சனிக்கிழமை அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் பேரணி நடைபெற்றது.
சென்னை புதுப்பேட்டை ஆதித்தனர் சாலையிலிருந்து காலை 10 மணிக்கு பேரணியை பொதுச் செயலாளர் இ முஹம்மது அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள். பெண்கள். சிறுவர்கள் கலந்து கொண்டு தீவிரவாதத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு வன்முறையில்லா தலைமுறை இஸ்லாம் கூறும் வழிமுறை கேட்டை விளைவிக்கும் தீவிரவாதத்தை நாட்டை விட்டே விரட்டிடுவோம்! பயங்கரவாதத்தை வேரறுப்போம்! பயமில்லா வாழ்வுக்கு பாதையமைப்போம்! போன்ற தீவரவாதத்திற்கு எதிராக கோஷங்களை முழங்கினர்.
இந்த பேரணிக்கு மாநில .துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார் துணை பொதுச் செயலார் ஏ.கே.அப்துல் ரஹீம்.மாநில செயலாளர்கள் ஐ அன்சாரி .காஞ்சி ஏ. இப்ராஹீம் .வட சென்னை மாவட்ட தலைவர் சாகுல்.தென் சென்னை மாவட்ட தலைவர் ஹபீபுல்லா.காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன்.காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமானுல்லாஹ்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இப்ராஹீம்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மாலிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியாக பேரணி ஆல்பர்ட் தியேட்டர் அருகே நிறைவுற்றது மாநில தலைவர் எம் ஷம் கல்லுஹா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில். நாட்டில் வன்முறைகள் பெருகி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது வன்முறையில்லா தேசத்தை உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும் நாட்டு மக்களிடம் அமைதி ஏற்படுத்தி அனைத்து தரப்பு மக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்திட வேண்டும்.
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை யார் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாம் தீவரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் அன்பு கருணை, அமைதி, மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கமாகும். எல்லா மக்களையும் நேசித்து அவர்களின் நலனையும் நாட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மனிதநேயத்தை பரப்பச் சொல்கிறது மனிதர்கள் இடையே உயர்வு தாழ்வு கற்பிக்காமல் அனைவரையும் சமமாக கருதி சகோகரத்துவத்தை போதிக்கிறது. முஸ்லிம்கள் என்றென்றும் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் நாம் ஒன்றிணைத்து அமைதியான தேசத்தை கட்டமைப்போம் இவ்வாறு அவர் பேசினார்.




