சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் நடத்திய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடைப்பெற்றது

0_IMG-20190731-WA0385

Faceinews Logo - Copy

டாக்டர். காயல். எஸ்.எம். ரஷ்மிரூமி அவர்கள் சர்வதேச அமைதி பல்கலைக்கழகம் சார்பாக சமூக நலனுக்காக சேவை செய்பவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்தது.

0_IMG-20190731-WA0384

26/07/2019 அன்று மாலை 5.45 மணிக்கு, சென்னை, ரஷ்யன் கலாச்சார மையத்தில், சென்னை சகோதரர்கள் டாக்டர். எஸ். ரகு மற்றும் டாக்டர் எஸ். ரவி அவர்களின் புல்லாங்குழல் இசைக்கச்சேரியுடன் இனிதே ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக, இசைக்குயில் டாக்டர். கீதாஸ்ரீ அவர்களின் கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தது.

கூடுதலாக, டாக்டர். பண்டிட் நாராயணன் எழுதிய ” வெற்றி உன் கையில் ” புத்தக வெளியீடு நடைப்பெற்றது.

0_IMG-20190804-WA0529

சிறப்பு விருந்தினர்களாக, ஜெர்மன் நாட்டை சார்ந்த டாக்டர். கிரிஸ்டியன் பிரிலிங்கர், இயக்குனர்,  சர்வதேச அமைதி பல்கலைக்கழகம்,  நீதியரசர். என். வைத்தியநாதன், பாக்யா வார இதழ் தலைமை சினிமா நிருபர் மணவை.பொன் மாணிக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டாக்டர். பி. பாலசுப்ரமணியன், நடிகர் கராத்தே ராஜா,  விதை 2 விருட்சம் சத்யமூர்த்தி, மருத்துவச்செம்மல் டாக்டர். ரேணுகா இராமகிருஷ்ணன், அமைப்பின் ஆலோசகர் டாக்டர். கிம் கோபி சுந்தராஜன், கலைஞர் குரல் ஆசிரியர் டாக்டர் எஸ். குணசேகரன், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஜனாப். என்.பி. இஸ்மாயில் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

0_IMG-20190731-WA0383

மருத்துவத்துறையில் பல சேவைகள் செய்து வரும் மருத்துவர் திருமதி. ரேணுகா இராமகிருஷ்ணன் அவர்களுக்கு மருத்துவச்செம்மல் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.  இசையின் மூலமாக பல சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வரும் இசைக்குயில் டாக்டர். கீதாஸ்ரீ அவர்களுக்கு சமூக சேவகி பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. மேலும், சமூக தொண்டாற்றிய சேவையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை டாக்டர். காயல். எஸ்.எம். ரஷ்மிரூமி மிகவும் சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்ச்சியை இசைக்குயில் டாக்டர். கீதாஸ்ரீ அருமையாக தொகுத்து வழங்கினார்.

சமூக நலனுக்காக பாடுபடும் சமூக ஆர்வலர்களை கௌரவிக்கும் இதுபோன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் சமூக நனுக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும். ஆகையால், இவர்களது பணி சிறக்கட்டும் வாழ்த்துகள்.

Faceinews.com