சென்னை மாமன்ற 36வது வட்ட உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் து.சம்பத் விருப்பமனு!

IMG-20191116-WA0044

Faceinews Logo - Copy

சென்னை மாமன்ற 36வது வட்ட உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் து.சம்பத் விருப்பமனு!

சென்னை :

விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.சார்பில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களிடம் நவம்பர் 15,16 தேதிகளில் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தலைமைக்கழகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையொட்டி வடசென்னை மாவட்டத்தில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் முகாம் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன்,வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஸ்,அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கா.சங்கரதாஸ் ஆகியோர் விருப்பமனுக்களை விநியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட கழக பிரதிநிதிகள் பலர் விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சென்னை மாமன்ற 36வது வட்ட உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் து.சம்பத் விருப்பமனு வழங்கினார்.

மனுவை பெற்றுக்கொண்ட இ.மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..,உள்ளாட்சி மன்றத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும்.சென்னையில் மேயர்,துணைமேயர் பதவியை அதிமுக கைப்பற்றும்.வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஸ் தலைமையின் கீழ் உள்ள 9 வட்டங்களிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.

Faceinews.com