தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்)அமைப்பு சார்பில் சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கான போட்டிகள்
நுங்கம்பாக்கம் : தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்) அமைப்பு மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு அணிகளின் பள்ளிகளுக்கிடையான போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அவர் பேச்சுப்போட்டி, வினாடி போட்டி, கட்டுரைப் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் முனைவர். எழிலரசன், சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் ஜெயகௌரி உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் தலைமை போக்குவரத்து காப்பாளர் ஹரீஷ் L.மேத்தா, துணை தலைமை போக்குவரத்து காப்பாளர்கள் (வார்டன்)அசீம் அஹமது. தெளலத், மூல்சந்த் மற்றும 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து காப்பாளர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



