இணைய வழி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான தேதிகளை ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.
• செயற்கை நுண்ணறிவு, கருவிகளை கற்றல், சைபர் பாதுகாப்பு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில்துறைக்குத் தேவைப்படும் நவீன பாடப் பிரிவுகள் உள்ளன.
சென்னை, டிசம்பர், 2019: கடந்த 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தில் இளங்கலை பாடத் திட்டங்கள், முதுகலை பாடத் திட்டங்கள், பட்டயப் படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டங்கள் உள்ளன. குறிப்பாக, பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டுமான தொழில்நுட்பம், கலை, அப்ளைடு சயின்ஸ், வடிவமைப்பு, சுகாதார அறிவியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பட்டப் படிப்புகள் இருக்கின்றன. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் காலத்துக்கு ஏற்றாற்போன்று பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பாடங்கள் உள்ளன. மரபுசாரா எரிசக்தி, சைபர் செக்கியூரிட்டி, வியோனிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. தொழில்நுட்பத் திறன்படைத்த நபர்களுக்கான தேவை மிகப்பெரிய அளவுக்கு உள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், புதிய புதிய பாடப் பிரிவுகளைக் கண்டறிந்து அவற்றை மாணவ-மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கவும் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளில் செயல்முறை ரீதியான அம்சங்களை ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இது மாணவர்கள் தங்களது கல்வியின் அடிப்படை வேர் வரை சென்று அறிந்து கொள்வதற்கான நல்வாய்ப்பை உருவாக்கித் தருவதுடன், ஆராய்ச்சி ரீதியான அம்சங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவிடும். மேலும், தொழில் துறைக்கு இப்போதைய தேவைப்படும் அம்சங்கள் குறித்து நன்கு தெளிவான ரீதியில் விஷயங்களை அறிந்து கொள்ளவும் செயல்முறை ரீதியான கற்றல் மற்றும் கற்பித்தல் முறை பயன்படும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனமானது, வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்விக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. பி.டெக்., பி.ஆர்க், பி.டெஸ்., ஆகிய படிப்புகளுக்கு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் 30 வரை தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வானது நாடு முழுவதும் உள்ள 50 மையங்களில் நடத்தப்படும். இதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களை இணையதளத்தில் www.hindustanuniv.ac.in இருந்தும், நேரடியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தும் அளிக்கலாம்.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி நாள் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 15.
ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தில் மூன்று வகையான பிரிவுகளில் கல்வி உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன. டாக்டர் கேசிஜி வர்க்கீஸ் கல்வி உதவித் தொகைகள் திட்டத்தின் கீழ், நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கல்விக் கட்டணம் விலக்கு, பொருளாதாரத்தில் நலிவடைந்த-மாற்றுத்திறனாளிகள்-முன்னாள் படைவீரர் வாரிசுளுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டு-கலைகளில் சிறந்து விளங்குவோருக்கு உதவித் தொகை என மூன்று பிரிவுகளில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு தேசிய தர மதிப்பீட்டு கவுன்சிலின் ஏ சான்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 4-க்கு 3.3 புள்ளிகள் பெற்று இரண்டாவது பிரிவு கல்வி நிறுவனங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேசிய அளவில் 95-வது இடத்தைப் பெற்றுள்ளது.
பி.டெக்.,கில் ஏரோனாட்டிக்கல், ஆட்டோமொபைல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயந்திரப் பொறியியல் ஆகிய படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு என்பிஏ தரக்குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. க்யூஎஸ் பிரிக்ஸ் ரேங்கிங் சிஸ்டத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ளது. பணியிட மேலாண்மை திட்ட அமைப்பின் கீழான டியூவி சான்று பெற்ற ஒரே கல்வி நிறுவனம் ஹிந்துஸ்தான் ஆகும். இளநிலையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை அறிய research@ug வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு தொழில் ஆலைக்கு ஒரு பேராசிரியர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மாணவர்களை ஒரு பேராசிரியரே சம்பந்தப்பட்ட தொழில் ஆலையில் மாணவர்களின் பணியிடை பயிற்சியை கண்காணித்து அறிக்கைகளைத் தயாரிக்க உதவி செய்வார்.
ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனமானது, 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 100-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. தியாகின் பல்கலைக்கழகம், சிட்னியில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், சீனாவின் எஸ்ஐஏஎஸ் சர்வதேச பல்கலைக்கழகம், பிரான்சின் பாலிடெக்னிக் அறிவியல் கல்வி நிறுவனம், ஜெர்மனியின் லிப்பி பல்கலைக்கழகம், இத்தாலியின் பாலிடெக்னிக்கோ, கொரியாவின் கூக்மின், மலேசியாவின் மல்டிமீடியா, ரஷ்யாவின் மாஸ்கோ ஏவியேஷன், துருக்கியின் இல்டிஷ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
மேலும், இஸ்ரேலின் பென் குரியன், சீனாவின் எஸ்ஐஏஎஸ், கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் கோடைகால கல்வித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அறிவுசார் பரிமாற்றங்களை பிரிட்டனின் லீட்ஸ், ரஷ்யாவின் மாஸ்கோ ஏவியேஷன் கல்வி நிறுவனம், ஜப்பானின் சாய்டமா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கலிபோர்னியா பாப்திஸ்த் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸின் பேபியா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ரோமேனியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் செய்துள்ளது.
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.hindustanuniv.ac.in


