தி பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளி கெருகம்பாக்கத்தில் பாரதிய சன்ஸ்க்ருதி சார்பில் நிகழ்ச்சி திரு. ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களால் தொடங்கப்பட்டது.

20191223_194750

Faceinews Logo - Copy

தி பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளி கெருகம்பாக்கத்தில் பாரதிய சன்ஸ்க்ருதி சார்பில் நிகழ்ச்சி திரு. ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களால் தொடங்கப்பட்டது.

20191221_132246

இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நாடகம், தனி நடிப்பு, நடனம், பாட்டு என பல கலைகளும் சங்கமிக்கும் விதமாகவும், அனைத்து ரசிகர்களும், ரசித்து மகிழும் படி இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

20191221_133417

சென்னை மிகப்பெரிய நகரமாக மாறி வரும் இந்நிலையில், தென் சென்னையிலும் கலைகள் வளரும் இடமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

IMG-20191222-WA0092

கிரேசி மாது பாலாஜி நாடகம், விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் ஷ்ரவ்ணின் இசைக் கச்சேரி, ஷியாம் மற்றும் ஜெகன் கிருஷ்ணாவின் தனி நடிப்பு போன்ற ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் ரசமயி சந்தியாவில் நடைப்பெற்றது.

IMG-20191222-WA0093

எட்டு நாட்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் மதியம் ( 2 – 3.30 ) மற்றும் மாலை ( 4.30 – 6 ) மணிக்கு நடைபெற்றது.

20191221_132843

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பள்ளியின் ரோட்டரி இன்ட்ரா கிளப் சார்பில், முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லத்திலிருந்து விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். சுமார் 100 இருக்கைகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

20191221_132229

ரசமயி சந்தியா நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வு மேலாளர் திரு. அன்சுமன் ஐயங்கார் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் ஆஸ்ட்ரல் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ஆவார்.

20191221_132217

இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்கு வடபழனி பேருந்து நிலையம் மற்றும் பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளி கிண்டி கிளையில் இருந்தும் இலவசமாக பேருந்து வசதி செய்யப்பட்டது.

20191221_133917

அனைவரும் ரசமயி சந்தியா நிகழ்ச்சியை கண்டு களித்து மகிழ்ந்தனர்.

20191221_133208

Faceinews.com