ம.பொ.சி. ஐயா அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க கிராமணி மக்கள் வாழ்வுரிமை நல சங்கம் மாநில அரசிடம் கோரிக்கை.
விடுதலை போராட்ட வீரரும், திருத்தணியை மீட்ட தியாகியும், குமரியும், செங்கோட்டையும், சென்னையும் தமிழகத்திற்கு கிடைக்க எல்லை காத்த காவலருமான ம.பொ.சி. ஐயா அவர்களின் பங்கு நாடு அறிந்ததே.
ஐயா அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி மத்திய அரசிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திருமதி. வானதி சீனிவாசன் வழியாக நம் பாரத பிரதமர் மதிப்பிற்குரிய ஐயா திரு. மோடி அவர்களிடம் இதை தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்று கிராமணி மக்கள் வாழ்வுரிமை சங்கத் தலைவர் K.V.S. தமிழ்வாணன் மற்றும் பொதுச் செயலாளர் முனைவர் G.B. பச்சையப்பன் அவர்களும் திருமதி. வானதி சீனிவாசன் மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அவரிடம் கோரிக்கை மனுவை சென்னையில் உள்ள பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் 06/01/2020 திங்கட்கிழமை, அன்று மாலை 6 மணி அளவில் வழங்கினார்கள்.

