பாதுகாப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் இயக்க அனுபவத்தில் அதன் தங்க தரத்தின் மூலம் இப்பிரிவை மறுவரையறை செய்கிறதுமுக்கிய சிறப்பசங்கள்:
• ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில்GNCAP 5-நட்சத்திர தரநிலை கொண்ட அல்ட்ராஸ் (இதன் வகையினத்தில் இந்தியாவின் மிக பாதுகாப்பான கார்) நுழைகிறது
• ஆட்டோமொபைல் தொழில்துறையின் முதல் முழுமையான BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெறுகிறது
சென்னை, ஜனவரி, 2020: ப்ரீமியம்ஹேட்ச்பேக்பிரிவில் தனது கால்பதிப்பை, இன்று அறிமுகம் செய்திருக்கிற அல்ட்ராஸ் வழியாக டாடா மோட்டார்ஸ் வலுவாக அறிவித்திருக்கிறது. பெட்ரோல் வேரியன்ட்டுக்கு ரூ. 5.29 லட்சம் மற்றும் டீசல் வேரியன்ட்டுக்கு ரூ.6.99 லட்சம் என்பதில் தொடங்கும் அறிமுக விலையில் நாடெங்கிலும் உள்ள டாடா மோட்டார்ஸ்-ன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் ஐந்து டிரிம் நிலைகளில் அல்ட்ராஸ் கிடைக்கும்.
புதிய ஆல்ஃபா கட்டமைப்பு மீது உருவாக்கப்பட்ட முதல் வாகனம் மற்றும் இம்பாக்ட் 2.0 வடிவமைப்பு மொழியை வெளிப்படுத்துகிற இரண்டாவது வாகனம் என்ற பெருமை அல்ட்ராஸ் கூறியது. இதன் கண்கவர் வடிவமைப்பு, இத்தொழில்துறையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படும் பல அம்சங்களின் தொகுப்பு மற்றும் குளோபல் NCAP 5 நட்சத்திர தர மதிப்பீடு என்ற மிக சமீபத்திய சாதனை ஆகியவற்றின் மூலம், பாதுகாப்பு, வடிவமைப்பு, இயக்கவியல் அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளரின் பெருமகிழ்ச்சி ஆகியவற்றில் தங்க தரநிலைகளை அல்ட்ராஸ் நிறுவியிருக்கிறது. வாடிக்கையாளர்களை இதன் மூலம் கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட அல்ட்ராஸ், தொழிலகத்திலேயே பொருத்தப்பட்ட 6 மாறுபட்ட, விருப்பத்திற்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய விருப்பத்தேர்வுகளுடன் வெளிவருகிறது.
டாடா மோட்டார்ஸ்-ன் பயணியர் வாகனங்கள் பிரிவின் தலைவர் திரு. மயங்க் பரீக், இது தொடர்பாக பேசுகையில், “எமது ப்ரீமியம் ஹேட்ச்பேக்-தி அல்ட்ராஸ்-ன் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். 5 நட்சத்திர குளோபல் NCAP தர மதிப்பீடை பெற்றிருக்கிற இரண்டாவது டாடா கார் என்பதிலும் மற்றும் ஒரு இந்திய கார் என்பதிலும் எங்களை ஏற்கனவே பெருமைப்பட செய்திருக்கும் காராக அல்ட்ராஸ் திகழ்கிறது. இதுவொரு முத்திரைபதித்த தயாரிப்பாகும் மற்றும் பாதுகாப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்பம், இயக்கவியல் அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர் பெருமகிழ்ச்சி ஆகியவற்றில் தங்க தரநிலைகளின் உண்மையான பிரதிநிதியாக இது இருக்கிறது. எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த டிரைவிங் அனுபவத்தை இந்த தயாரிப்பு வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நாங்கள் கால்பதிக்கின்ற இத்தருணத்தில் புதிய தர அளவீட்டு குறிகளையும் இது நிர்ணயிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.
பாதுகாப்பின் தங்க தரநிலை
தனது 5 நட்சத்திரகுளோபல்NCAP தரமதிப்பீட்டின் மூலம் தங்க தரநிலையை அல்ட்ராஸ் நிர்ணயிக்கிறது. மேம்பட்ட ஆல்ஃபா கட்டமைப்பு, ஸ்டாண்டர்ட் அம்சங்களாக ABS, EBD & CSC மற்றும் இரண்டு ஏர்பேகுகள் போன்ற இவ்வகையினத்தில் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் வெளிவருகிறது. மிக விரிவான பாதுகாப்பு அம்சங்களுடன், ஆற்றலை உள்வாங்கும் ஆல்ஃபா கட்டமைப்பு இதில் இருப்பதனால் டாடா அல்ட்ராஸ் காரில் பயணிப்பவர்கள் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பை பெறுபவர்களாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
வடிவமைப்பில் தங்க தரநிலை
இம்பாக்ட் 2.0 வடிவமைப்பு கோட்பாட்டின் அடிப்படையிலான அல்ட்ராஸ்-ன் எதிர்காலத்திற்குரிய வடிவமைப்பு நவீன, அறிவார்ந்த மற்றும் இரசனையோடு உருவாக்கப்பட்டுள்ள உட்புற வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. 90 டிகிரி அளவிற்கு திறக்கும் கதவுகள், வாகனத்திற்குள் நுழைவதையும் மற்றும் வெளியே வருவதையும் எளிதாக்கும் வகையில் போதுமான இடவசதி இருப்பதை உறுதிசெய்கின்றன. லேசர் கட் அலாய் வீல்களும் மற்றும் காரின் உட்புறத்தில் தப்ரீமியம் பிளாக் பியானோ பினிஷிங்கும், சாலையில் இக்கார் பயணிக்கும்போது தனித்துவ தோற்ற இருப்பினை உருவாக்குகிறது. அழகான தோற்றத்தின் மூலம் வாடிக்கையாளரின் மதிப்பை இன்னும் ஸ்டைலானதாக உயர்த்த உதவுகிறது.
தொழில்நுட்பத்தில் தங்க தரநிலை
17.78 செண்டிமீட்டர் தொடுதிரை ஹர்மான் இன்ஃபோடெயின்மெண்ட் வசதியும் மற்றும் இவ்வகையினத்தில் மிகச்சிறப்பான ஒலிபெருக்கி அமைப்பும் கொண்ட அல்ட்ராஸ் வாய்ஸ் கமாண்ட் ரெககனிஷன், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டர்ன்-பை-டர்ன் அம்சம் ஆகியவை இணைக்கப்பட்டதாக அல்ட்ராஸ் வெளிவருவது, சிரமமற்ற மற்றும் மிக இனிமையானஅனுபவம் கிடைக்கப்பெறுவது உறுதிசெய்யப்படுகிறது.
இயக்கவியல் அம்சங்களில் தங்க தரநிலை
சக்திவாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் மிக நேர்த்தியான சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கும் அல்ட்ராஸ், உண்மையிலேயே ஒரு அற்புதமான டிரைவிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மல்டி டிரைவ் மோட்களுடன் க்ரூஸ் கன்ட்ரோல் அம்சமும் இதில் இருப்பது, நெருக்கடி மிகுந்த நகர சாலைகளோ அல்லது அதிவேக நெடுஞ்சாலைகளும் எதுவாக இருப்பினும் மிக சவுகரியமான டிரைவிங் அனுபவத்தை ஏதுவாக்குகின்றன.
வாடிக்கையாளர் பெருமகிழ்ச்சியில் தங்க தரநிலை
சமதளமான பின்புற தரைப்பரப்பு, பின்புற ஏசி வெண்ட்கள், விசாலமான கேபின் இடவசதி மற்றும் 24 பயன்பாடுகளுக்கான அமைவிடங்கள் இக்காரில் இடம்பெற்றிருப்பது இதில் பயணிக்கும் அனுபவத்தை வசதியானதாகவும், ஆனந்தமானதாகவும் ஆக்குகின்றன. விசாலமான, சவுகரியமான உட்புற கட்டமைப்பு மற்றும் அலங்கார வசதிகளுடன் அணியக்கூடிய கீ ஃபாப், வாடிக்கையாளருக்கு சிரமமே இல்லாத இனிய அனுபவம் கிடைக்குமாறு செய்கிறது.
இந்த புதிய காரின் அணிவரிசை குறித்து அதிகம் அறிய அல்லது டெஸ்ட் டிரைவ்-க்கு முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் விஜயம் செய்யலாம்: ‘cars.tatamotors.com’ அல்லது டிவிட்டரில் கீழ்வரும் சமூக ஹேண்டில்களை பின்தொடரலாம் – https://twitter.com/TataMotors_Carsமற்றும் முகநூல் -https://www.facebook.com/officialtatamotorscars



