நாடு தழுவிய `SHAIR’ தலைமுடி நன்கொடை இயக்கம்˜
புற்று நோயாளிகளுக்கு உதவ கிரீன் டிரெண்ட்ஸ் அறிமுகம்
புற்று நோயாளிகளுக்கு உதவ பொதுமக்களுக்கு அழைப்பு
சென்னை, பிப்ரவரி, 2020: உலக புற்று நோய் தினத்தையொட்டி கிரீன் டிரெண்ட்ஸ் சலூன் தனது `SHAIR’ தலைமுடி நன்கொடை இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த இயக்கம் புற்று நோய் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ்பவர்களுக்கு விக் தயாரிக்கவும், புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துவக்கப்படுகிறது. அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவைக் கொடுக்கவும், அவர்களுக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் `SHAIR’ இயக்கத்தை கிரீன் டிரெண்ட்ஸ் துவக்கி உள்ளது.
இந்த `SHAIR’ இயக்கத்தை கிரீன் டிரெண்ட்ஸ் ஒரு மாத காலம் நடத்த உள்ளது. இதன் மூலம் தலைமுடி நன்கொடை மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கொண்ட செல்லவிருக்கிறது. நாட்டின் மிகவும் பிரபலமான லூனான கிரீன் டிரெண்ட்ஸ் கவின்கேர் குழுமத்தின் ஒரு அங்கமாகும்.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கிரீன் டிரெண்ட்ஸ் SHAIR பிரச்சார இயக்கமானது 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தேசிய அளவில் தலைமுடி நன்கொடை இயக்கம் பிப்ரவரி 4-ந்தேதி முதல் இந்தியா முழுவதிலும் உள்ள 375க்கும் மேற்பட்ட கிரீன் டிரெண்ட்ஸ் சலூன்களில் துவக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த சலூன்களுக்கு சென்று தங்கள் முடியை நன்கொடையாக வழங்கலாம். இந்த மாத இறுதியில் முதல் கட்டம் முடிவடைவதைத் தொடர்ந்து 2வது கட்டமாக பிரமாண்ட முடி நன்கொடை நிகழ்ச்சி சென்னையில் அடுத்த மாதம் மார்ச் 1-ந்தேதி நடைபெறுகிறது.
கிரீன் டிரெண்ட்ஸ் SHAIR 2020 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் விருப்பமுள்ள நன்கொடையாளர்கள் ஒரு மாதத்திற்கு தங்கள் முடியை வெட்டாமல் வளர்த்து, பிரமாண்ட முடி நன்கொடை நிகழ்ச்சியில் தங்கள் முடியை நன்கொடையாக வழங்க கிரீன் டிரெண்ட்ஸ் அழைக்கிறது. நன்கொடை அளிப்பவர்களின் முடி குறைந்தபட்சம் 10 அங்குலம் இருக்க வேண்டும்.
இது குறித்து கவின்கேர் சலூன் பிரிவு வர்த்தகத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ஒரு புற்று நோயாளி, தான் மட்டும் தனியாக போராடுவதில்லை என்பதையும், இந்த இயக்கத்தின் மூலம் உதவுவதே எங்களின் நோக்கம் என்பதையும் இந்த இயக்கத்தின் மூலம் நாங்கள் தெரியப்படுத்துகிறோம். புற்று நோய்க்கு எதிரான பெரிய போராட்டத்தில் SHAIR இயக்கம் என்பது ஒரு சிறு விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். இது அவர்களுக்கு தேவையான விஷயங்களை கொஞ்சம் சிறப்பாக செய்ய முயற்சிக்கும் வழியாகும். இந்த SHAIR இயக்கமானது 360 டிகிரி அணுகுமுறையில் விழிப்புணர்வு உருவாக்கத்தோடு, முடி நன்கொடையிலும் ஈடுபட உள்ளது. இது விக் உற்பத்தி மற்றும் விக் ஒப்படைப்பின் கடைசி இடம் வரை செல்லும். உங்கள் தலைமுடியை தானம் செய்ய இது சரியான இடம் ஆகும். ஏனெனில், இது மக்களுக்கு ஒரு வித்தியாசமான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வழியைக் கொண்டுவருவதற்கான தளத்தை வழங்குகிறது. இந்த இயக்கத்தின் மூலம் நாங்கள் எங்கள் சலூன் பிரான்சைஸ் உரிமையாளர்கள் மற்றும் அழகுகலை நிபுணர்களுடன் பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை வெற்றி பெறச் செய்யவும் அவர்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து கிரீன் டிரெண்ட்ஸ் யுனிசெக்ஸ் ஹேர் அன்ட் ஸ்டைல் சலூன் தலைமை செயல்பாட்டு அதிகாரி தீபக் பிரவீன் கூறுகையில், கிரீன் டிரெண்ட்ஸ் SHAIR இயக்கத்தை நாடு முழுவதிலும் நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். புற்று நோய் சிகிச்சையின் போது முடி உதிர்தல் என்பது வெளிப்படையான அறிகுறியாகும். இது தற்காலிகமானது என்றாலும், அது அவர்களின் அடையாளமாக்குகிறது. மேலும் அவர்களை உணர்வுப்பூர்வமாகவும் பாதிக்கிறது. விக் அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். செயற்கை கூந்தலால் செய்யப்பட்ட விக்குகளை நீண்ட நேரம் அணிய முடியாது. அதன் காரணமாக எரிச்சல் ஏற்படுவதோடு தலையிலும் அதிக சூடு ஏற்படும். மனித முடியில் இருந்து தயாரிக்கப்படும் விக்குகள் அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த இயற்கையான விக் மிகவும் விலை உயர்ந்ததாகும். அதை எல்லோராலும் வாங்க இயலாது. கிரீன் டிரெண்ட்சின் இந்த இயக்கத்தின் மூலம், தேவைப்படுபவர்களுக்கு இந்த விக்கை இலவசமாக வழங்க இருக்கிறோம். அந்த விக்குகளை செய்ய இந்தியா முழுவதிலும் உள்ள கிரீன் டிரெண்ட்ஸ் சலூன்களுக்கு பொதுமக்கள் முன் வந்து தங்கள் முடியை தானமாக வழங்க வேண்டும். கிரீன் டிரெண்ட்ஸ் SHAIR திட்டத்தின் ஒரு பகுதியாக தனித்துவமிக்க `SHAIRகட்’ என்னும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது நன்கொடையாளர்களின் தற்போதைய சிகை அலங்காரம் பாதிக்கப்படாத வகையில், நன்கொடை அளிப்பதற்கு முன் எப்படி இருந்ததோ அதே போன்று முடி இருக்க உதவி செய்யும். SHAIR கட் மூலம் தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஒரு நன்கொடையாளர், அவர்கள் விரும்பும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ முடியை நன்கொடை அளிக்க முடியும். அவர்களின் முடி மட்டும் குறைந்தபட்சம் 10 அங்குல நீளம் இருக்க வேண்டும். இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 375க்கும் மேற்பட்ட எங்களின் சலூன்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளோம். எனவே இந்த இயக்கத்தில் பொதுமக்கள் பங்கேற்று புற்று நோயாளிகளுக்கு உதவ முன் வர வேண்டும். இந்த முயற்சி சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
SHAIRகட் மூலம் 10 அங்குல முடியை கொண்ட நன்கொடையாளர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த முடி தானத்திற்கு பிறகு அவரது சிகை அலங்காரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தனித்துவமான இயக்கத்தை அறிமுகம் செய்துள்ள கிரீன் டிரெண்ட்ஸ், முடி நன்கொடை மற்றும் நம்பிக்கையின் அடையாளத்தை குறிக்கும் விதமாக ஒவ்வொரு நன்கொடையாளருக்கும் முடி நீட்டிப்பு கிளிப் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நன்கொடையாளர் தனக்கு வழங்கப்பட்ட இளஞ்சிவப்பு முடி நீட்டிப்பு கிளிப்பை அனைவரிடமும் காண்பித்தார்.