சென்னை டிஏவி பள்ளிகள் குழுமம், தேசிய திறந்த நிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது: 2020 ஜூலை 25 –ல் இணைய தளம் வாயிலான தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது
சென்னை டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டங்கள் வாயிலான கல்வியை வழங்கி வரும் நிலையில் இப்போது கூடுதலாக ஒரு புதிய கல்வி முறையையும் வழங்குகிறது. தேசிய திறந்த நிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தின் (National Institute of Open Schooling – NIOS) கல்வித் திட்டத்தையும் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் இப்போது வழங்குகிறது.
கல்விசார் அம்சங்களில் எப்போதும் சிறப்பாக டி.ஏ.வி பள்ளிகள் குழுமம் அறியப்படுகிறது. பல்வேறு காரணங்களால் வழக்கமான பள்ளிப்படிப்பின் கட்டமைப்பையும் கடினத்தன்மையையும் கையாள்வதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி வழங்குவதையும் டி.ஏ.வி. நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
என்.ஐ.ஓ.எஸ். (NIOS), அனைத்து வகையில் கற்பவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது: கல்வியில் உயர் செயல்திறன் கொண்டவர்கள், பள்ளிக் கல்விசாராமல் இருந்து கல்வியில் ஆர்வமுள்ளவர்கள், வீடுகளில் பள்ளிக் கல்வியைப் படிக்கும் குழந்தைகள், வயதைப் பொருட்படுத்தாமல் இடைநிற்கும் மாணவர்கள் மற்றும் கற்றலில் குறைபாடு மற்றும் சவால்கள் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான கல்வித் தேவைகளை என்.ஐ.ஓ.எஸ். பூர்த்தி செய்கிறது.
கற்பவர்களை முற்றிலும் மையமாகக் கொண்ட இந்த கல்வித் திட்டத்தின் நன்மை என்னவென்றால், பள்ளிச் சூழலைத் தக்க வைத்துக் கொண்டு செயல்படும் அதே நேரத்தில் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது, கற்றலில் வேகம், வருகைப் பதிவு மற்றும் தேர்வுகளின் தேதிகள் உள்ளிட்டவற்றில் கூட நெகிழ்வுத் தன்மையை இது மாணவர்களுக்கு வழங்குகிறது. என்.ஐ.ஓ.எஸ். வாரியம் (NIOS board) சிபிஎஸ்இக்கு இணையாக கருதப்படுகிறது மேலும் என்.ஐ.ஓ.எஸ். கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அனைத்து தேசிய / சர்வதேச தேர்வுகளுக்கு தகுதியுடையவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். டி.ஏ.வி. பள்ளியில் என்.ஐ.ஓ.எஸ். பாடத் திட்டத்திலான கல்வி ஆகஸ்ட் மாதத்தின் மையப்பகுதியில் இருந்து தொடங்கப்படுகிறது. வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை கோபாலபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெறும். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வித் திட்டத்தில் சேரலாம். வீடுகளில் பள்ளிக் கல்வி பயின்றவர்களாக இருந்தால் 10-ம் வகுப்புக்கு 14 வயதுக்கு மேற்பட்டவர்களும் 11-ம் வகுப்புக்கு 15 வயதுக்கு மேல் உள்ளவர்களும் இந்தக் கல்வித் திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள்.
இந்தக் கல்வித் திட்டத்திற்கு சென்னை என்.ஐ.ஓ.எஸ்.-ன் முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் பி. ரவி தலைமை வகிப்பார்.
2020 ஜூலை 25 அன்று மாலை 4:30 மணிக்கு முறைப்படியான தொடக்க நிகழ்ச்சி ஜூம் செயலி வழியாக நடைபெறுகிறது. இதில் இணைய தளம் வாயிலான தகவல் அறியும் அமர்வும் இடம்பெறும். இந்தக் கூட்டத்திற்கான அடையாள எண் (Meeting ID): 919 3322 8642; கடவுச்சொல் (Password): 3286464.



