தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது :
ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடுகிறது.
இந்த விழாவில் ஜல்லிக்கட்டு புரட்சியின் 5 ஆம் வருட வெற்றியை அடையாள படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் சிலையை மாநில தலைவர், பொது செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த அடையாள சின்னமானது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு வெற்றி உலாவாக கொண்டு செல்ல உள்ளோம். ஏற்கனவே R. k. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டதோடு, 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 16 இடங்களில் மோதிர சின்னத்தில் போட்டியிட்டோம், தற்போது அதே மோதிர சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி கடந்த அக்டோபர் மாதம் இளைஞர்களின் வழிகாட்டி திரு.அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாள் அன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில், துடிப்பான , திறமையான இளைஞர்களை கொண்டு தனித்து போட்டியிடுவோம் என்று ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்களை இன்று ஒரே மேடையில் அறிமுக படுத்தியது.
இது இன்றைய அரசியல் சூழலில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறோம். மீதி உள்ள வேட்பாளர்களையும் விரைவில் அறிப்போம்.
இந்த நிகழ்வில், பழ கருப்பையா அவர்களும், பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி , நடிகர் ராஜ சிம்மா , அறிவார்ந்த மக்கள் கட்சி நிறுவன தலைவர் க.தாஸ், மற்றும் AVMK நிர்வாகிகள், கையெழுத்து இயக்கம் தோழர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பாமக மாவட்ட பொறுப்பு மற்றும் இளைஞர் அணியில் உள்ள நண்பர்கள், தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர், அவர்களுடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் கட்சியில் அவர்களை இணைத்து கொண்டனர்.



