தென்காசி மாவட்டம் சுரண்டையில் கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் துவக்க விழா!

IMG-20210219-WA0060

Faceinews Logo - Copy

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் துவக்க விழாவில்

NFS அறக்கட்டளை யின் பனை பயணத்தை பாராட்டி பனைமர காவலர் விருது வழங்கப்பட்டது :

 

 

IMG-20210219-WA0058

 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக 2021ஆம் ஆண்டிற்கான ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் துவக்க விழா நடைபெற்றது.

NFS அறக்கட்டளை நண்பர்கள் 2017 முதல் பல ஆயிரக்கணக்கான பனை விதைகளை நட்பு அமைப்புகளுடன் இணைந்து விதைத்து வருகிறார்கள்.

IMG-20210219-WA0061

மேலும் பனை சார்ந்த விழிப்புணர்வுகளும் செய்து வருகிறார்கள்.

கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நேற்றைய விழாவில் நமது NFS அறக்கட்டளையின் பனை பயணத்தை பாராட்டி பனைமர காவலர் வருதினை திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவபத்மநாதன் அவர்களும்,

சுரண்டை பேரூர் கழக செயலாளர் திரு.ஜெயபாலன் அவர்களும்

நமது NFS அறக்கட்டளைக்கு விருதினை வழங்கி பாராட்டினார்கள்.

IMG-20210219-WA0062

இவ்விழாவில் NFS அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் மற்றும் , ஒருங்கிணைப்பாளர் கோகுல் கலந்துகொண்டு விருதினை பெற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கலாமின் கனவுகள் அறக்கட்டளை யின் நிறுவனர் சுமு.முருகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்…

IMG-20210219-WA0064

 

 

 

 

Faceinews.com