மதுரையில் உலக மொழியாம் தமிழ், தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழ் அன்னை சிலைக்கு அனைத்திந்திய விஸ்வகர்மா மக்கள் கமிட்டியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது :
உலக மொழியாம் தமிழ் மொழியினை போற்றும் விதமாக தாய் மொழி நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் தல்லாகுளம், தமுக்கம் மைதானம் வளாகத்தில் உள்ள தமிழ் அன்னையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் அனைத்திந்திய விஸ்வகர்மா மக்கள் கமிட்டியின் மாநில தலைவர் க.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில துனை செயலாளர் ஆ. அண்ணாமலையார், மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் செ.பெரியதுரை, விக்னேஷ் கார்த்திக், திலகராஜ், அஜய்,, பல்வேறு அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள்,பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



