கொடைக்கானல் அருகே கீழ் மலைப் பகுதியான கே.சி பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பகுதி கள்ளக்கிணறு இந்தப் பகுதியில் புலையர் இன பழங்குடிகள் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காப்பி,வாழை,மிளகு போன்றவை விவசாயம் செய்து வருகின்றனர். விளைந்த விவசாயப் பொருட்களை அப்பகுதி மக்கள் தலைக்கு மேலாக சுமந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று கே.சி பட்டி பகுதிக்கு சென்று பொருட்களை வைத்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் வெளி மார்க்கெட்டிற்கு அனுப்பி வருவார்கள்.
மேலும் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வரும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்கிணறுக்கு செல்லும் பகுதியில் நடுவில் காட்டாறு செல்கிறது.இந்த ஆற்றை கடந்துதான் கள்ளக்கிணறு பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டும்.மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் தண்ணீர் குறையும் வரை 3 அல்லது 4 நாட்கள் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படும்.அவசரமாக செல்ல வேண்டும்.என்றால் கயிறு கட்டி ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.அதே நிலைமைதான் தொடர்ந்து இருந்து வந்தது.மேலும் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் கள்ளக்கிணறு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்கிணறு பகுதிக்கு கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபகரன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.அப்போது பழங்குடியின மக்கள் தங்களுக்கு பாலம் அமைத்து தர வேண்டும்.என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து ஆற்றுப் பகுதியில் சுமார் 10 லட்சம் செலவில் இரும்பு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அந்த பாலத்தின் பணிகள் கடந்த வாரம் முடிவுற்றது.இந்த நிலையில் நேற்று கொடைக்கானலுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ் அவர்கள் அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பாலம் அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முயற்சி எடுத்த கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபகரன் அவர்களுக்கும் பழங்குடியின மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.


