கொடைக்கானலில் காட்சிப் பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம்.

IMG-20210226-WA0029

Faceinews Logo - Copy

கொடைக்கானலில் காட்சிப் பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம்.

 

 

கொடைக்கானல்.பிப்.27

 

 

கொடைக்கானலில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஏ.டி.எம் குடிநீர் இயந்திரம் செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் இதற்கு மாற்று ஏற்பாடாக கொடைக்கானல் நகர்ப்பகுதியில் ஏ.டி.எம் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்படும்.என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

 

இதன் அடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம் குடிநீர் இயந்திரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொடைக்கானல் நகராட்சி படகு இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

அதே போல் நகராட்சி அறிவித்த இடங்களில் இதுவரை ஏ.டி.எம் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட வில்லை. தனியார் பங்களிப்புடன் ஒரு சில இடங்களில் பெயரளவிற்கு மட்டுமே இந்த குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் இன்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே உடனடியாக நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Faceinews.com