மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஹரிஜன காலனியில் ஒன்றுசேர் இளைஞர் மன்றம் சார்பாக மாலை நேர கல்வி பயிலகம் திறக்கப்பட்டது!

IMG-20210310-WA0005

Faceinews Logo - Copy

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஹரிஜன காலனியில் ஒன்றுசேர் இளைஞர் மன்றம் சார்பாக மாலை நேர கல்வி பயிலகம் திறக்கப்பட்டது :

IMG-20210310-WA0004

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஹரிஜன காலனியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி பயிலகம் துவக்கப்பட்டது.

IMG-20210310-WA0009

மேலும் நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகள் மற்றும் இடர்பாடுகளுக்கு பின்பு இந்த மாலை நேர கல்வி பயிலகமானது இளைஞர்களின் தன்னெழுச்சியாக திறக்கப்பட்டுள்ளது… இந்த நிகழ்வில் சமூக நீதி மற்றும் மனித உரிமையாளர் பிரிவு காவல் உதவி ஆணையர் சிவகுமார் அவர்கள் தலைமை வகித்தார்.

IMG-20210310-WA0006

மேலும் ஒன்றுசேர் இளைஞர் மன்றத்தின் தலைவர் காளீஸ்வரன், தலைமை நிர்வாகி தமிழ்பதி ஏற்பாட்டில் நடைபெற்றது.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சந்திக்கவிருக்கும் குடும்ப,சமூக,சுற்றுப்புற இடர்பாடுகள் குறித்தும் மாணவர்கள் எவ்வாறு தங்கள் இலக்குகளை நோக்கி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், விரிவாக எடுத்துரைக்கப்பட்டது… அதேபோல் இந்த மாலை நேர கல்வி பயிலகமானது.

IMG-20210310-WA0007

அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் 3 மாதங்களில் இந்த கல்வி பயிலகம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அரசு தேர்வுக்கு பயிற்சி பெறும் பயிற்சி மையமாகவும், மேடைப்பேச்சு மற்றும் சமூக நீதி பொருளாதாரம் குறித்து கற்பிக்கப்படும் எனவும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

IMG-20210310-WA0008

இந்த நிகழ்வில் சுப்பிரமணியபுரம் ஹரிசன காலனியை சேர்ந்த பெண்கள்,

பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உதவி பேராசிரியர்கள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள், வேலைவாய்ப்பு பயிற்சி மைய அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

 

 

 

 

 

Faceinews.com