கிராமிய கலை வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அக்கட்டளை சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில்
கிராமிய கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை சார்பாக சர்வதேச கிராமியக்கலை விருதுகள் 2021 முப்பெரும் விழா பேருராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில், நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு விருதுகளும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது..
நிகழ்ச்சிக்கு கரவடி ஷேக் மஸ்தான் நாதஸ்வர விரிவுரையாளர் இசை கல்லூரித் தலைவர் தலைமை தாங்கினார். தங்கவேல் தலைவர் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் காரியாபட்டி ரவிச்சந்திரன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கிராமிய கலைகள் வளர்ச்சி மற்றும் நல அமைப்பு அறக்கட்டளை… மேலும் இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்களும் சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது..
இதில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் செயல்பட்டு வரும்
தீபம் இந்தியா அறக்கட்டளை சிறப்பாக செயல்பட்டதற்காக விருதுகள் வழங்கப்பட்டது..
மேலும் இந்நிகழ்ச்சியில் மங்கல இசை நையாண்டி மேளம் கரகாட்டம் கரகாட்டம் காவடியாட்டம் சிலம்பாட்டம் எனவே மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது…



