கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் உரிமைச் சட்டம் பயனாளிகள் சங்க கூட்டம் நடைபெற்றது!

IMG-20210315-WA0037

Faceinews Logo - Copy

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் உரிமைச் சட்டம் பயனாளிகள் சங்க கூட்டம் நடைபெற்றது :

 

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள சங்க அலுவலகத்தில் வைத்து சங்கத்தலைவர் பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்..

IMG-20210315-WA0038

மேல்புறம் ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார் …

செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரதாஸ் சங்க தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.

சங்க செயலாளர் வசந்த பாய் சங்க அறிக்கையினை சமர்ப்பித்தார் …

சங்க துணை பொருளாளர் ஜான் ரோஸ் 2020,2021 நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார் …

அதனை பொதுக்குழு விவாதத்தின் பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும்சங்கத்தின்

2021 ,2022 க்கான நிதியினை பொறுப்பாளர்கள் தேர்வு குறித்து தலைவரால் விவாதிக்கப்பட்டது.. மேலும் பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

 

தீர்மானம் :

 

1,கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நாள் கணக்கில் மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளது இதனால் போக்குவரத்து தடை பெறுவதுடன் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது எனவே உடனடியாக அந்த மண்ணை மாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு 5 நாட்களுக்குள் மண்ணை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது எனவும் இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

2,பத்மநாபபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை மாற்றுப் பணிக்கு பணிக்கப்படுகிறது இதனால் துப்புரவு பணிகள் முடக்கப்படுகிறது எனவே பொதுமக்கள் நலன் கருதி துப்பரவு பணியாளர்கள் துப்புரவு பணிக்கு பணியமர்த்த வேண்டும் என்றும் பத்மநாபுரம் நகராட்சியை கேட்டு இந்த பொதுக்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

3,ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் கன்னியாகுமரி சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களது விலை மதிக்க முடியாத தங்களது வாக்கினை 100% வாக்களிக்க வேண்டும் என்று பொது மக்களை கேட்டு இந்த பொதுக்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்த கூட்டத்தில் ராஜ சித்திரா ,அன்ன புஷ்பம், ஜெனிஷ,உஷாராணி, தனலட்சுமி ,மேரிஎழிலரசி, சரஸ்வதி ,பினிஷா,ராஜம், சஜினி ,கிளிட்டஸ், சரோஜினி, திலகன் அலெக்சாண்டர், செல்வகுமார்,ஜாண், லாசர், அனீஸ்,ராஜேஸ்வரன்,சாகுல்ஹமீது,

சமூக ஆர்வலர் முகம்மதுசபீர்

மற்றும் பலர் கலந்துகொண்டனர்…

 

 

 

 

 

 

 

Faceinews.com