மிர்ச்சி ஒரிஜினல்ஸ் இன் நாடகம் , காதல் மற்றும் காமெடி கலந்த கலவை இப்போ கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளை சீசன் 3 உடன் திரும்பியும் வந்தாச்சு

மிர்ச்சி ஒரிஜினல்ஸ் இன் நாடகம் , காதல் மற்றும் காமெடி கலந்த கலவை இப்போ கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளை சீசன் 3 உடன் திரும்பியும் வந்தாச்சு

Faceinews Logo - Copy

மிர்ச்சி தமிழ் இன் யு டீயுப் சேனல் -இல் , மூன்றாவது சீசன் தொடக்கம்

சென்னை: மிர்ச்சி ஓட வீடியோ என்டேர்டைன்மெண்ட் கன்டென்ட் தொகுப்பான மிர்ச்சி ஒரிஜினல்ஸ் , தங்களோட சீசன் 3 அ ACKO இன்சூரன்ஸ் வழங்கும் ‘கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளை ’ வெப் சீரிஸ் மூலமா லான்ச் செய்ய தயாராயிட்டாங்க . தங்களோட உண்மை போன்ற கதை களத்துக்கும் , காமெடிக்கும் பெயர் போன இதோட புத்தம் புது சீசன் அ மிர்ச்சி தமிழ் இன் யு டீயுப் சேனல் ல வரும் மார்ச் 15 அன்னைக்கு ஒளிபரப்புறாங்க .

6 எபிஸோட்ஸ் கொண்ட இந்த சீரிஸ் அ, கபிலன் வைரமுத்து எழுதிர்க்காரு . இந்த சீரிஸ் ல ரொம்பவும் பிரபலமான நிஜ தம்பதியான செந்தில் குமார் னு அழைக்கப்படற மிர்ச்சி செந்தில் உம் அவரோட மனைவியான ஸ்ரீஜா சந்திரன் , உம் நடிச்சிருக்காங்க . இதை இயக்குனர் – J. ஜஸ்வினி இயக்கிருக்காங்க .

தினசரி வாழ்க்கைல தம்பதியினர்களுக்கு நடுவுல நடக்கும் கார சார விஷயத்தை கொஞ்சம் காமெடி கலந்து சொல்றதுல இந்த தொடர் ரொம்பவே பிரபலாமானது . அதுவும் நிஜ வாழ்க்கை தம்பதியான செந்தில் மற்றும் ஸ்ரீஜா மூலமாவே இந்த கதை சொல்லப்படுது . ரொம்பவே சாதாரணமான தருணங்களை படம் பிடிச்சு காட்றதுல இந்த தொடர் ஸ்பெசிலிஸ்ட்னே சொல்லலாம் . இந்த மூன்றாவது சீசன் அ லாக்டவுன் ஸ்பெஷல் னு சொல்லலாம் . குறிப்பா இந்த சீசன் ல லாக்டவுன் சமயத்தில ஒரு தம்பதி படும் அவஸ்தை , எதிர்கொள்ற பிரச்னைகளை காட்டியிருக்காங்க . நான்கு சுவர்களுக்குள்ள கிட்ட தட்ட ஒரு வருடம் இந்த தம்பதிய அடைச்சு வெச்சா எப்படி இருக்கும் ? இவங்களோட கல்யாணத்துக்கே பரீட்சை வெச்ச மாறி இருக்கு . இதுல அவங்களோட தினசரி வேலைகள் வேற இருக்கு . கொஞ்சம் கொஞ்சமா உலகம் இயல்பு நிலைக்கு திரும்புறப்போ , சில சிறப்பான திறன்களை இதே ஜோடி கொண்டு வராங்க .

சீசன் 3 ஓட லான்ச் பத்தி பேசுறப்போ , இதன் இயக்குனர் J. ஜஸ்வினி , “கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளைய இயக்குறப்போ நா இதுனால ரொம்ப என்ஜோய் பன்னென்னா அது இந்த லாக்கடவுன் ல இருக்கிற சந்தோஷமான நிகழ்வை படம் பிடிச்சு காட்டுது . இதோட ஹீரோ ஹெரோஇனே உண்மையான வாழ்க்கைளையும் தம்பதியா இருக்கிறதால இதுல இன்னும் அதிகமான உண்மைத்தனம் வெளில தெரியும் . இந்த லாக்டவுன்லே எந்தெந்த தம்பதிகள் லாம் ஒண்ணா இருந்தார்களோ , அவங்க எல்லோராலையும் இதை உணர முடியும் .”

கூடவே மிர்ச்சில ஒரிஜினல் கன்டென்ட் அண்ட் லைசென்சிங் இன் நேஷனல் ஹெட் ஆனா கணேஷ் ஐயர் , தெரிவிக்கிறது என்னனா, “கல்யாணம் : கண்டிஷன்ஸ் அப்ளை ’, எங்களோட ரொம்பவே முக்கியமான தொடர் . மக்களாலயும் அதிகமா கொண்டாடப்பட்டது . அதுக்கு முக்கியமான காரணம் அதோட உண்மை தன்மை தான் . இதோட மூணாவது சீசன்ல , இந்த உலகத்துக்கே பொதுவான ஒரு பிரச்னையை எடுத்து பேசிருக்கோம் – அதான் லாக் டவுன் . இதை பாக்கிற மக்களையும் ஒரு எமோஷனல் ரோலர்கோஸ்டெர் ல கூட்டிட்டு போகும் என்றதுல எந்த சந்தேகமும் இல்ல .”

எங்களோட மிர்ச்சி ஒரிஜினல்ஸ் ஐபி லைப்ரரில இருந்து இதை வெளியிடறதுல நாங்க ரொம்பவே பெருமை கொள்கிறோம் .. எங்க குழு பொதுவாவே மொழிகளுக்கு அப்பாற்பட்டு செயல் படுறதுல , இவ்ளோ உண்மையான ஒரு கதை களத்தை சினிமா தனத்துடன் சேர்த்து எளிதா கொண்டு வர முடியுது .

Here’s the link to the show –

 

 

 

 

 

 

Faceinews.com