மதுரை மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு வழிகாட்டி மணிகண்டன் ஊக்கம்!

IMG-20210327-WA0036

Faceinews Logo - Copy

மதுரை மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு வழிகாட்டி மணிகண்டன் ஊக்கம்

 

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுகாதார பணியாளர்களை பாராட்டி உணவு வழங்கினார்.

IMG-20210327-WA0037

இதுகுறித்து அவர் கூறுகையில்:

 

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக சிம்மக்கல் பகுதியில் சுகாதார பணியாளர்கள் தங்களது பணிகளை காலை ஏழு மணி முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குகின்றனர்.

 

மேலும் வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்குவதோடு வீட்டு கழிப்பறை அருகில் தேங்கியுள்ள நீர் மற்றும் திறந்த நிலையில் வைக்கப்படும் நீர் குறித்து மக்களை எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

 

கொரோனா நோய் பரவிய பகுதிகளுக்கு அருகில் செல்லவே பலர் அச்சப்படும் நிலையில் முன்கள பணியாளர்களாக முதலில் அங்கு சென்று ஆய்வு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் அவர்களின் பணி உன்னதமானது.

 

இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் பாராட்டு தெரிவித்தேன் என்றார்.

 

தங்களது பணிகளை ஊக்கப்படுத்தி உணவு வழங்கிய வழிகாட்டி மணிகண்டனுக்கு சுகாதார பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

Faceinews.com