கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC) ஒரு பிரத்யேக, நவீன எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர் தொடக்கம்!

GGHC - Photo 1 - Launch of Advanced Endoscopic Spine Centre

Faceinews Logo - Copy

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC) ஒரு பிரத்யேக, நவீன எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர் தொடக்கம்

 

 

 

~புதிதாக தொடங்கப்பட்டுள்ள இம்மையம், நுண்துளை எண்டோஸ்கோப்பிக் சிகிச்சைகளை ஏதுவாக்கும் சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது

 

 

 

25 மார்ச், 2021, சென்னை: பன்முக சிறப்பு சிகிச்சைகளுக்கான முன்னணி மருத்துவமனை என புகழ்பெற்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), அறுவைசிகிச்சை அவசியப்படுகின்ற முதுகுத்தண்டு கோளாறுகளுக்கு பிரத்யேக சிகிச்சையளிக்க ஒரு நவீன எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர் என்பதை தொடங்கியிருக்கிறது. இச்சிகிச்சை மையம், கீழ்ப்புற முதுகில் பிரச்சனைகள், எலும்பு தேய்மானம், கால்களுக்குப் பரவுகின்ற முதுகு வலி மற்றும் கைகளுக்குப் பரவுகின்ற கழுத்துவலி ஆகிய பிரச்சனைகளுக்கு சிகிச்சைத் தீர்வுகளை வழங்கும். இம்மையத்தில் இடம்பெற்றுள்ள உயர்நிலை தொழில்நுட்பம், ரேடியோஅதிர்வெண் சாதனம் மற்றும் மிக நேர்த்தியான அளவுபெருக்கி மற்றும் தெளிவான பார்வைநிலைகளை வழங்கும் துல்லியமான உயர்வேக HD கேமராக்கள் ஆகியவை, நோயாளிக்கு மிகவும் பாதுகாப்பான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிசெய்கின்றன.

 

 

 

முதுகுத்தண்டு பிரச்சனைகள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றிலிருந்து விரைவாக குணம்பெற்று மீள உதவுகின்ற சிறப்பான சிகிச்சை தீர்வுகளை ஏதுவாக்குவதே இம்மையத்தின் நோக்கமாகும். கடந்த 5 ஆண்டுகளில், 300-க்கும் அதிகமான வெற்றிகரமான எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சைகளை GGHC – ல் முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்கள் செய்திருக்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் இருந்த கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70-க்கும் அதிகமான அறுவைசிகிச்சைகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இம்மையத்தின் தொடக்கவிழாவில் உரையாற்றிய கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையின் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர். அலோக் குல்லார், “GGHC – ல் நோயாளியை மையப்படுத்துகின்ற முக்கியத்துவமே முதன்மையான முன்னுரிமை பெறுகிறது. நவீன தொழில்நுட்பம், நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் உயர் பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு சிகிச்சை முறைகளுக்கான இந்த பிரத்யேக உயர்சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருப்பது, முதுகுத்தண்டு தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த சிகிச்சை கிடைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது. உடனடியாக வலி நிவாரணத்தை வழங்கும் நுண்துளை அறுவைசிகிச்சையும் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு மிக குறைவான காலத்திற்கே கவனிப்பு சேவை தேவைப்படுவதும், முதுகுத்தண்டு பிரச்சனைகளால் சிரமப்படுகின்ற நோயாளிகளுக்கு ஒரு அற்புதமான வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தின்போது, கோவிட்-19 தொற்றுக்கான இடரைத் தவிர்ப்பதற்காக சில மணி நேரங்களில் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து, அவர்களை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய எங்களால் முடிந்திருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

 

 

 

இப்பிரத்யேக சிகிச்சை மையம் குறித்து பேசிய கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையின் மேம்பட்ட முதுகுத்தண்டு அறிவியல் மையத்தின் இயக்குனர் டாக்டர். கருணாகரன், மிக அதிக பாதுகாப்புடன் நோயாளிகளுக்கு உடனடியாக வலிநிவாரணத்தை வழங்குவதே இம்மையத்தின் நோக்கமாகும். இடுப்பு முதுகெலும்பு, கீழ்ப்புற முதுகு, இடுப்பு தட்டு சரிவு, கெனால் ஸ்டெனோசிஸ் (குறுக்கம்), இடுப்பு முகப்பில் மூட்டுவீக்கம் மற்றும் உட்கழுத்து தட்டு சரிவு ஆகியவற்றிற்கு எண்டோஸ்கோப்பிக் முறையில் இம்மையத்தில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. எண்டோஸ்கோப்பிக் முறையிலான முதுகுத்துண்டு சிகிச்சை செயல்முறை என்பது, கீறல் மற்றும் அதற்கான தையல் இல்லாத பகல்நேர சிகிச்சை செயல்முறையாகும். பாதுகாப்பை உறுதிசெய்யும் இச்சிகிச்சை முறையானது, உடற்கூறுகளை தக்கவைத்துக் கொள்கிறது மற்றும் நோய்க்குறிகளை அகற்றுகிறது. இதில், நோயாளி விரைவாக மீண்டெழுவதோடு சில மணிநேரங்களுள்ளாகவே தனது இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மிக மிக குறைந்த அளவிலேயே இரத்தஇழப்பு, குறைவான மருந்துகளின் பயன்பாடு ஆகிய சிறப்பு அம்சங்களே இதற்கு காரணம். அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிகளுக்கும் மற்றும் இணைநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் இச்சிகிச்சை செயல்முறை அதிக பயனுள்ளதாக இருக்கும்,” என்று விளக்கமளித்தார்.

 

 

 

சமீபத்தில், தனது கீழ்முதுகு மற்றும் கால்களில் கடுமையான வலியுடன் இரு கால்களிலும் இடுப்புக்கு கீழ் பகுதியிலிருந்து மரத்துப்போகும் பிரச்சனையைக் கொண்டிருந்த 40 வயதான ஒரு பிளம்பருக்கு இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. முள்ளந்தண்டு கடைவால் நோய்க்குளி (Cauda Equina Syndrome) இருப்பதாக உறுதி செய்யப்பட்ட இந்நோயாளிக்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. L4 மற்றும் L5 அமைவிடங்களில் மிகப்பெரிய அளவு தட்டு (டிஸ்க்) சரிவு இருந்தது மற்றும்கோவிட்-19 தொற்றும் இவருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட அமைவிடத்தில் மட்டும் மரத்துப்போகும் மருந்து கொடுத்து செய்யப்படும் எண்டோஸ்கோப்பிக் சிகிச்சை செயல்முறை மட்டுமே இவருக்கான ஒரே விருப்பத்தேர்வாக இருந்தது. இச்சிகிச்சை செயல்முறையானது, அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது மற்றும் உடனடியாகவே அவரது பாதிப்பு அறிகுறிகளிலிருந்து இந்நோயாளிக்கு நிவாரணம் கிடைத்தது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இவர், கோவிட்-19 தொற்று பிறருக்கு பரவாமல் இருக்க தன்னையே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். இப்போது இவர் நன்றாக குணமடைந்திருக்கிறார். அவரது தசை இயக்க செயல்பாடுகளையும் மற்றும் மலம்கழிப்பு மற்றும் சிறுநீர் கழிப்பு செயல்பாட்டையும் மேம்படுத்துவதற்காக சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யுமாறு இவர் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

 

 

 

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னையின் மேம்பட்ட முதுகுத்தண்டு அறிவியல் மையத்தின் முதுநிலை மருத்துவர் டாக்டர். பானி கிரண் இது தொடர்பாக விளக்கமளிக்கையில், “பெரும்பாலான முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படாது: ஆனால், பிற சிகிச்சை முறைகளுக்கு பலனளிக்காத கடுமையான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை அவசியமாக இருக்கிறது. முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை என்ற நிலையை எதிர்கொள்ளும்போது பெரும்பாலான நபர்களின் மனதில் தேவையற்ற அச்சம் இருக்கிறது. நவீன தொழில்நுட்பம், நுண்துளை அறுவைசிகிச்சை யுத்திகள், அறுவைசிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி மற்றும் பல ஆண்டுகள் அனுபவம் ஆகியவை முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளை இன்றைக்கு மிகவும் பாதுகாப்பானதாக ஆக்கியிருக்கின்றன. ஆகவே, இதை செய்து கொள்வதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இடுப்பெலும்பு தட்டு பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்கு எண்டோஸ்கோப்பிக் முறையிலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை தங்க தரநிலையிலான சிகிச்சை செயல்முறையாக அதிவேகமாக உருவெடுத்து வருகிறது,” என்று குறிப்பிட்டார்.

 

 

 

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களினால் சிகிச்சையை எளிதாக்குகின்ற பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளில் ஏற்பட்டுள்ளன. உரிய நேரத்தில் செய்யப்படும் எண்டோஸ்கோப்பிக் செயல்முறை வழியாக, அறுவைசிகிச்சை நிறைவடைந்த ஒருசில மணி நேரங்களுக்குள்ளாகவே வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற்று இப்போது நடக்கவும் மற்றும் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் இயன்முறை மருத்துவம் மற்றும் உடற்பயிற்சிகளின் ஆதரவோடு இச்சிகிச்சை முறையை மேற்கொள்ளும் நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.

Faceinews.com