என்ஜாய் என்சாமி, குட்டி பட்டாஸ் வெற்றி வரிசையில் “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ” இசை ஆல்பம்!

IMG-20210305-WA0028

Faceinews Logo - Copy

சென்ற மாதம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் அவரது மகள் சினிமா பாடகி தீ தனது வசீகர குரலில், அறிவு அவர்களுடன் இணைந்து பாடி நடித்து வெளிவந்த என்ஜாய் என்சாமி இசை ஆல்பத்தை ஏ ஆர் ரஹ்மானின் மாஜா நிறுவனம் வெளியிட்டு மிகப் பெரிய வெற்றியடைந்தது.

அதன் பின்னர், விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் இசை ஆல்பமூம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

IMG-20210305-WA0029

அதே போல், ஆண்டனி தாசன் அவர்களின் கலக்கல் குரலில் வெளியான “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ” இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. சினிமா இசையமைப்பாளர் பிரம்மா இசையில் இப்பாடல் இளைஞர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.

சிம்பு உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய “பீப்” பாடல் போன்று தோன்றினாலும் பாடல் வரிகள் தக்க விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே இப்பாடலின் சிறப்பு.

இசையமைப்பாளர் பிரம்மா இதற்கு முன், குப்பம்மா 96 சிக்மா ஸ்டைல் எனும் இசை ஆல்பத்தை பிரபல பாடகர்/பாடகிகளை பாட வைத்து வெளியிட்டார். அதன் பின், அழகிய அசுரா, நண்பர்களின் கவனத்திற்கு ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்போது, ஹலோ எக்ஸ்கியூஸ் மீ பாடலின் வெற்றி பல இசை ஆல்பம், சினிமா வாய்ப்பு வழங்கியுள்ளது.

இப்பாடலில் நாயகனாக KPY பிரகாஷ் கலக்கியுள்ளார்.  இவர் விஐய் தொலைக்காட்சியில் வெளிவந்த கலக்க போவது யாரு சீசன் 7 போட்டியாளர். நடனத்தின் மீது கொண்ட அதீத ஆர்வத்தில் பிரகாஷ் டான்ஸ் அகாடமி ஆரம்பித்து நடன பயிற்சி வழங்கி வருகிறார்.

நாயகி தாஷ்மிகா லக்ஷ்மண் பொம்மை துப்பாக்கி மற்றும் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த இசை ஆல்பத்தில் பாடல், இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை பத்திரிகையாளர் மதிஒளி ராஜா தனது மதிஒளி ராஜா பிலிம்ஸ் சார்பாக தனது இரண்டாவது படைப்பாக வழங்கியுள்ளார்.

இப்பாடலின் நடன அமைப்பை ஷ்யாம் அவர்கள் சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவு HSK அருமையாக வழங்கியுள்ளார். படத்தொகுப்பு பணி நாராயணன் அவரது பணி சரியாக செய்துள்ளார்.

துள்ளல் இசையில், வசீகர வரிகளில், இளமை கொஞ்சும் உருவாக்கத்திலும் இப்பாடல் இன்றைய கால இளைஞர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.

இப்பாடல் “MX PLAYER” OTT PLATFORM வெளியாகி சக்கைப் போடு போடுகிறது.

இப்பாடலை கண்டுக் களிக்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் :-

 

 

 

 

 

Faceinews.com