தென்காசி மாவட்டத்தில் NFS அறக்கட்டளை இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்து நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

IMG-20210417-WA0057

Faceinews Logo - Copy

தென்காசி மாவட்டத்தில் NFS அறக்கட்டளை இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்து நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

IMG-20210417-WA0058

தம்‌ வாழ்நாளை முழுவதும் பிறரின் மகிழ்ச்சிக்காக வாழ்ந்து முடித்த , ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியதோடு நம் சுற்றுச்சூழலின் பெரும் அக்கறை கொண்டு பல இலட்ச மரங்களை நட்டுவைத்து இன்று (17.04.2020 ) அதிகாலை நம்மை விட்டு சென்ற பசுமை நாயகன் நடிகர் விவேக் அவர்களின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது.

IMG-20210417-WA0056

மேலும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்காசி மாவட்டத்திலுள்ள வி‌.கே‌.புதூர் அரசு‌ மேல் நிலைப்பள்ளியில்  NFS அறக்கட்டளையும் அப்பள்ளியின் சுற்றுப் புறச்சூழல் மன்றமும் இணைந்து பள்ளியின் ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கியும், பள்ளியில் மரக்கன்று நட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG-20210417-WA0055

மேலும் இந்நிகழ்வில், பள்ளியின் ஆசிரியர்கள், NFS அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் அஜய், அருண், விஜய், கோகுல், மனோஜ், ராஜா அவர்கள் கலந்துகொண்டனர். அப்துல்கலாம் அவர்களின் மேல் உள்ள பற்றுதலால் நடிகர். விவேக் அவர்கள் லட்ச‌ கணக்கான ‌மரக்கன்றுகளை நட தொடங்கினார்.

அவர் விட்டு சென்ற பணிகளை நாம் தொடர்வோம் என உறுதி எடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

Faceinews.com