அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் – தேசியத் தலைவர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழக அரசுக்கு இதயபூர்வமாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் DTCP/CMDA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (RERA) பதிவு செய்து உத்தரவு பெறாமல், பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பதிவு செய்ய கடந்த 17/12/2021 முதல் தடை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களும் மனை வணிகம், கட்டுமானம், உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களும் வணிக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்தப் பிரச்சினையை FAIRA சார்பில் அதன் நிறுவனர் – தேசியத் தலைவர், டாக்டர்.திரு.ஆ. ஹென்றி அவர்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எளிய முறையில் RERA வில் பதிவு செய்யும் வகையில் பரிந்துரைத்தனின் அடிப்படையில், அரசு மேற்கண்ட திட்டங்களை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் மிகவும் எளிமையாக பதிவு செய்யும் வகையில் வழிவகை செய்து அதற்கான உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.
மேற்கண்ட பிரச்சனைக்கு விரைவாக தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தந்தமைக்கு மாண்புமிகு தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி அவர்களுக்கும், TNRERA சேர்மன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் FAIRA சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக FAIRA தலைவர் ஆ.ஹென்றி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


