(22-06-2022) அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மறைந்த திரு. D.S.ரவீந்தரதாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தென்சென்னை மாவட்டம் சார்பாக சென்னையில் உள்ள தலைமையகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.A. லட்சுமணன், செயலாளர் திரு. P.பார்த்திபன், பொருளாளர் திரு. S.யுவராஜ், திரை தீபம், ஃபேஸ் நியூஸ் டிவி, மதிஒளி சினி நியூஸ் ஆசிரியர் – வெளியீட்டாளர் திரு.மதிஒளி ராஜா,
தென் சென்னை செய்தி தொடர்பாளர் திரு. K.அருண்குமார், துணைத் தலைவர் திரு.சி.பாலாஜி கொளத்தூர், செயற்குழு உறுப்பினர் திரு. ஜெயக்குமார், துணைச் செயலாளர் திரு. நிவாஸ், திரு. வேணுகோபால் உள்ளாட்சி முரசு, திரு. அருண்குமார், திரு. கணபதி, திரு. உமா மகேஸ்வர ராவ் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


















