CRNI நிறுவனம் துவக்க விழா.
கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களையும், கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்களையும், அவற்றினை சந்தைப்படுத்துகின்றவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் வணிகத்தை பன்மடங்கு அபிவிருத்தி செய்து மேம்படுத்திடும் நோக்கத்தில், பரிந்துரை வணிகத்தை முன்னெடுக்க கூடிய வகையில் CRNI (CONSTRUCTION AND REAL-ESTATE NETWORK OF INDIA) என்ற அமைப்பு கோவை லீ மெரிடியன் ஓட்டலில் CRNI நிறுவனர் மற்றும் சேர்மன் திரு.லிங்கராஜ் அவர்களின் தலைமையில் துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
மேலும் டாக்டர்.ஹென்றி அவர்கள் பேசுகையில் CRNI நிறுவனத்தின் சேர்மன் திரு.லிங்கராஜ் அவர்கள் மிகச் சிறந்த ஆளுமை. தலைமைப் பொறுப்புக்கு மிகவும் தகுதி படைத்தவர். அவர் செய்கின்ற பணி மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையுமென்று பாராட்டிப் பேசினார். மேலும் அவர் முன்னெடுக்கின்ற பணிகளில் ஏற்றம் இருக்கும், இறக்கம் இருக்கும், மாற்றம் கூட இருக்கும், ஆனால் ஒருபோதும் ஏமாற்றம் இருக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும் உள்ளபடியே சிஆர்என்ஐ நிறுவனம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களுக்கும், கட்டுமான பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கும் சந்தைப்படுத்துகின்றவர்களுக்கும் அவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் வலிமை பெறுவதற்கும், வளம் பெறுவதற்கும், மிகவும் பயனுள்ளதாகவும், பாலமாகவும் அமையும் என்றார்.
தற்போதைய தமிழக அரசு கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறைக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தகவல்களையும், தொழில் சார்ந்த நுணுக்கங்களையும் நிச்சயமாக இந்நிறுவனம் வாரம் மற்றும் மாதக் கூடுகையில் தமிழக அளவில் பெருநகரங்களில் இருக்கின்ற அனைத்து குழு உறுப்பினர்களிடையே நடைபெறுகின்ற கூட்டங்களில் ஏற்படுத்தும். அவர்களின் நட்பை பேணிக்காத்து வணிகத்தை பன்மடங்கு அபிவிருத்தி செய்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.
அதேபோன்று கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுமானத் துறையை பலவகையிலும் தாங்கி வெளிவரும் பில்டர்ஸ் வேர்ல்டு மாத இதழின் மூலம் இந்நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு வியாபார வாய்ப்புகளும் பெரிதளவில் பெருகும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்நிறுனத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்க கூடிய வகையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு என்றைக்கும் தோழமையோடு CRNI நிறுவனத்துக்கும் உறுப்பினர்களுக்கும் தோள் கொடுக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து விடைபெற்றார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் துணைத் தலைவர் ச.செந்தில்குமார், தியாகராஜன், பாலசுப்பிரமணியன், சுரேஷ்குமார், கண்ணன், மெடிக்கல் நாராயணன், பிரசன்னமணிகண்டன், பிரபாகரன், சங்கரநாராயணன், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, மோகன்ராஜ், கிரிஷ் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் 500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




