வரும் ஜுலை மாதத்தில் சோனி பிபிசி எர்த் அலைவரிசையுடன் ஒரு சாகசப் பயணத்திற்கு தயாராகுங்கள்
சென்னை: வியப்பில் ஆழ்த்தும் அற்புதமான ஒளிப்பதிவு, மனதை ஒன்றவைக்கும் கதை சொல்லல் முறை ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற சோனி பிபிசி எர்த், நம்பிக்கையையும், நேர்மறை உணர்வையும் மனதில் பதிய வைக்கின்ற மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து பரவசப்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் வனஉயிர்கள், அறிவியல், சாகசம் மற்றும் ஆராய்ச்சி, பொறியியல் மற்றும் உற்பத்தி மற்றும் மீன்பிடிப்பு என பல்வேறு வகையினங்களை உள்ளடக்கி, மாறுபட்ட பிரிவுகளில் சிறப்பான நிகழ்ச்சிகளை இந்த சேனல் வழங்குகிறது. 2022 ஜுலை மாதத்தில் “சீனா: இயற்கையின் புராதன பேரரசு” (‘China: Nature’s Ancient Kingdom’) மற்றும் “இது எங்கிருந்து வருகிறது” (Where It Comes From) என்ற புத்தம் புதிய தொடர்களின் ஒளிபரப்பை முதன்முறையாகத் தொடங்குவதன் மூலம் தனது சிறப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்த பிராண்டு மேலும் வலுப்படுத்த முனைகிறது.
மூன்று எபிசோடுகளை உள்ளடக்கிய சீரிஸான சீனா: இயற்கையின் புராதன பேரரசு என்பது, உலகின் மிகப்பெரிய வளங்காப்பு செயல்திட்டத்தை விளக்குகிறது. வனேசா கிர்பியின் வர்ணனையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி, சீனாவின் மலைப்பிரதேசங்களுக்கும் மற்றும் அடர்ந்த காடுகளுக்கும் உங்களை ஒரு பயணத்தில் அழைத்துச் செல்கிறது. வித்தியாசமான சப்பை மூக்கு கொண்ட குரங்குகள் மற்றும் புகழ்பெற்ற ஜெயன்ட் பாண்டாக்கள் ஆகிய அரிதான உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. பெருநகரங்களுக்கு வெளியே சற்று தள்ளி வசிக்கும் உள்ளூர் மக்கள் பல நேரங்களில் வனங்கள் மற்றும் வனஉயிர்களின் தாக்கத்தை அனுபவப்பூர்வமாக உணர்கின்றனர்; இத்தகைய வனஉயிர்களை ஆபத்தாக கருதி ஒதுக்கிவிடாமல் அவைகளை ஏற்றுக்கொள்வதும் மற்றும் அவைகளோடு இணைந்து வாழவும் இந்த மக்கள் கற்றுக்கொள்வதும் அவசியமாகும். இச்செய்தியினை இத்தொடர் ஆழமாக வலியுறுத்துகிறது.
இதுவரை கண்டிராத இடங்களுக்குச் செல்லும் ஆய்வாளர்களது உணர்வைத்தூண்டும் அதே நேரத்தில், “இது எங்கிருந்து வருகிறது” (Where It Comes From) என்ற நிகழ்ச்சி, பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும். நாம் தினசரி பயன்படுத்துகின்ற பல்வேறு பொருட்களின் ஆர்வமூட்டும் கதைகளை இது நேர்த்தியாக வலுப்படுத்துகிறது. நாம் உண்கின்ற பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து, அணிகிற ஆடைகள், தினசரி அடிப்படையில் நாம் பயன்படுத்துகின்ற கணினிகள் வரை இந்த விளைபொருட்களும், தயாரிப்புகளும் நமக்கு சொல்வதற்கு அற்புதமான கதைகளை கொண்டிருக்கின்றன. விலைமதிப்புள்ள இத்தயாரிப்புகளை மிகப்பெரிய அளவில் உலகெங்கும் அனுப்பி வைப்பதற்கு தேவைப்படுகின்ற லாஜிஸ்டிக் பணிகள் சார்ந்த மாபெரும் முயற்சியை இது வெளிப்படுத்துகிறது. நான்கு எபிசோடுகளை உள்ளடக்கிய இத்தொடரானது, ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வானிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்பதிவின் மூலம் நமது கண்களுக்கு அழகிய விருந்து படைக்கிறது. அதுமட்டுமின்றி, இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சிஜி அனிமேஷன்கள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
“சீனா: இயற்கையின் புராதன பேரரசு” (‘China: Nature’s Ancient Kingdom’) மற்றும் “இது எங்கிருந்து வருகிறது” (Where It Comes From) ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் கேளிக்கையும், கற்றலும் ஒருங்கிணைந்த பயணத்தை மேற்கொள்ள தயாராகுங்கள். சோனி பிபிசி எர்த் அலைவரிசையில் முறையே 2022 ஜுலை 2, இரவு 9.00 மணிக்கும் மற்றும் 2022 ஜுலை 15, இரவு 8.00 மணிக்கும் இந்நிகழ்ச்சிகளின் ப்ரீமியர் ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்!