தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச. கருப்பையா அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு

தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச. கருப்பையா அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு

ஈரோடு சேலம் மாவட்டங்களில் பட்டியல் இன மக்களின் பஞ்சமி நிலம் நில குடியேற்ற கூட்டுறவு சங்கங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலம்,நில ஒப்படை நிலங்கள் பூமி தான் நிலங்கள் ஆகியவற்றில் பட்டியல் அல்லாத பிற சாதி தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் மீட்க கோரியும் நிலையில்லாத பட்டியல் இன மக்களுக்கு நிலம் வழங்க கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் மற்றும் பல்வேறு ஒத்த சிந்தனை கொண்ட சனநாயக சக்திகள் இணைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்கு தலித் விடுதலை இயக்கம் ஈரோடு மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமையில், தமிழக மக்கள் புரட்சி க் கழகம் தலைவர் அரங்க குணசேகரன் துவங்கி வைத்தார், மக்கள் தமிழகம் கட்சி தலைவர் ‌நிலவழகன், புரட்சி பாரதம் கட்சி மாநில துறை பொதுச்செயலாளர் பூங்கா நகர் காமராஜ், மக்கள் தேசம் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் வழ.பிரசாத், மக்கள் சட்ட உரிமை இயக்கம் தலைவர் அண்ணாத்துரை, அயோத்தி தாசர் திராவிட கழகம் வள்ளுவர் தாசன், தலித் உரிமை இயக்கம் தலைவர் கோபால், ஏப்ரல் 14 இயக்கம் மாநில சிறுபான்மையினர் அணி செயலாளர் இக்பால்,சிவகுரு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச.கருப்பையா நிறைவுரையாற்றினார்.
போராட்டத்தில் ஈரோடு சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்.போராட்ட குழுவை நில நிர்வாக ஆணையர் நேரடியாக அழைத்து பேசினார்.இதில் 15-தினங்களுக்குள் ஈரோடு சேலம் மாவட்டம் நில ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.அத்தோடு ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் மாத்தூர் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டிய நிலங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தி நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும உறுதி அளித்தார்.

ஈரோடு மாவட்ட தலைவர் பொன் சுந்தர் நன்றியுடன் நிறைவடைந்தது

Faceinews.com