திருநர் உரிமை கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு !

திருநர் உரிமை கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு !

 

திருநங்கை – திருநம்பியர்கள் குறித்தான அரசியல் கோரிக்கைகள் எழாத காலம் அது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில திருநங்கைகள் ஒன்று கூடி எங்களுக்கான உரிமைகளைத் தேடி பயணப்பட்டோம்.எங்களின் அரசியல் பயணம் முட்கள் நிறைந்தது.நாங்கள் ஏந்திய பதாகைகளில் முக்கியமானதாக “திருநர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு” என்பது முக்கியமானதாக இருந்தது,இருக்கிறது.எங்கள் பயணங்கள் ஆர்ப்பாட்டம்,சாலை மறியல்,சட்டமன்ற முற்றுகை,வேலைவாய்ப்பு அலுவலக முற்றுகை,பொதுக்கூட்டம்,பிரச்சாரக் கூட்டம்,விழிப்புணர்வுக் கூட்டம் என பல்வேறு வடிவங்களை கடந்து வருகிறது.எங்களின் பதாகையை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒன்றிய அரசின் செவிகளில் நெருக்கமாக கேட்கும் வண்ணம் புதுடெல்லியில் பல்வேறு போராட்டங்களை கட்டமைத்தோம்.அதற்காக பல்வேறு நெறுக்கடிகளுக்கு ஆளானோம்.

உலகின் பல அரசுகளுக்கும் எங்களின் சமூகத்தினருக்கான கோரிக்கைகளை எழுப்பி வருகிறோம்.தமிழகத்தில் தொடங்கிய எங்கள் இயக்கம் இன்று உலக திருநர்களை அரசியில் ரீதியில் அமைப்பாக்கி வருகிறது.நாங்கள் விடியலைத் தேடி செல்லும் தூரம் வெகு தொலைவில் என்று தெரிந்தும் உங்களின் ஆதரவுக் கரங்களை ஆரத்தழுவிக் கொண்டே பயணிக்கிறோம்.எங்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட இந்த பத்த்தாம் ஆண்டு நிறைவில் எங்களுக்கான அடையாளச் சின்னத்தை ( logo) உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறோம். !

உலகில் எங்கெங்கெல்லாம் திருநர்களின் விசும்பல்கள் கேட்கிறதோ எங்கெங்கெல்லாம் எங்கள் திருநர் உரிமைக் கூட்டமைப்பு

கண்ணியம்,தன்னுரிமை, சமத்துவம் ஆகிய கோட்பாடடங்கிய எங்கள் பதாகையை,எங்கள் சின்னத்தை உயர்த்திப் பிடிக்கும் !

சாதி,நிறம்,இனம்,மொழி,தேசம் கடந்து திருநர்களுக்கான முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கும் !

 

#TransRightsNow #transrightsarehumanrights #transwritersarewriters #horizantalreservationfortrans #EndTransphobia #EndViolenceAgainstWomen #endcaste #transgenderrights #transarehuman

Faceinews.com