மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர் D.M.தருமராஜா அவர்களின் தாயார் 4 ம் ஆண்டு நினைவு நாள்!!!

மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர் D.M.தருமராஜா அவர்களின் தாயார் 4 ம் ஆண்டு நினைவு நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வேஷ்டி, சேலை, உணவு வழங்கினார்.

மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியர் டி.எம்.தருமராஜா அவர்களின் தாயார் தெய்வத்திரு எம்.காந்திமதி அம்மாள் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு மலர் அஞ்சலி நிகழ்ச்சி சென்னை – வளசரவாக்கம் அக்க்ஷயா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட மூத்தோர்கள் அனைவருக்கும் உணவு, மற்றும் வேஷ்டி, சேலை வழங்கினார் டி.எம்.தருமராஜா.

 

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் வி.பாஸ்கர், மாநில பொருளாளர் என்.சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ். முரளி, எ.ஆர்.திருநாவுக்கரசு,

தென் சென்னை மாவட்ட தலைவர் எஸ்.வி. கோபிநாத் பிஏ,  துணைத் தலைவர் எம்.மதுரை இளஞ்செழியன் பி ஏ, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் டி. டென்னீஸ்ராஜா, பொறுப்பாளர் டி‌. தீபக்குமார் குப்தா,

செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் சி.இமையரசு,  துணை அமைப்பாளர் என்.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர் பி.சுரேஷ், தமிழன் டிவி ராஜா, வெளிச்சம் டிவி எஸ்.ஜெயகர், யுகம்நியூஸ் ராஜ்குமார், PM டிவி செல்வராஜ், விடியும் நேரம் மோகன், அதிர்வலைடிவி நாராயணன் மற்றும் அஜித்குமார், விக்கி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Faceinews.com