ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் : தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐஏஎஸ் அவர்களிடம் மனு!!!

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐஏஎஸ் அவர்களிடம் மனு அளித்த, ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,

நிர்வாகிகள்.

 

 

சென்னை தலைமைச்செயலகத்தில்

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்

திரு.த.மோகன் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து  ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,

சார்பில் புதிதாக பொறுப்பேற்று கொண்டதற்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டது

 

பின்பு

 

2018 ம் வருடத்தில் இருந்து இதுவரை புதிய அரசு அடையாள அட்டை பத்திரிகையாளர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை, புதிய அரசு அடையாள அட்டையை விரைவாக அனைவருக்கும் வழங்கிட கோரியும், பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் சுலபமாக இணைய வழிவகை செய்யும்படியும், மேலும் சென்னை மாவட்டம் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கிட கோரியும் மனு அளிக்க பட்டது,

 

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் D.M.தருமராஜா D, Astro, மாநில பொதுச் செயலாளர் V.பாஸ்கர் BBA, தேனை பார்வை பத்திரிகை ஆசிரியர் N.சரண்குமார், தேனை பார்வை துணை ஆசிரியர் P.வெங்கடேசன், தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA, துணை தலைவர்

K.குமார், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர்

P.பிரகாசம் BA, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு,

துணை பொறுப்பாளர்

B.சுரேஷ், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்

T.தீபக்குமார் குப்தா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

பத்திரிகையாளர்களுக்கு புதிய அரசு அடையாள அட்டை தருவதற்கு இன்னும் அதிக தாமதம் ஏற்பட்டால்

 

நீதிமன்றத்திற்கு செல்ல தயாராக உள்ளோம் எங்களுடன் சேர்ந்து நீதிமன்றத்திற்கு வர தயாராக உள்ளவர்கள் 9884655661 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Faceinews.com