சிறைவாசிகள்_விடுதலைக்காக_ஜூலை_8_ல்_மறியல்_போராட்டம்..!

#சிறைவாசிகள்_விடுதலைக்காக_ஜூலை_8_ல்_மறியல்_போராட்டம்..!

 

#மஜக_சென்னை_மண்டல_ஆலோசனைக்_கூட்டத்தில்_முடிவு..!!

 

ஜூன்.23

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தலைமையில் 22.06.2023 அன்று சென்னையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாநில,மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு…

 

தீர்மானம் 01.,

 

தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறைவாசிகளில் 10 ஆண்டுகளை கடந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நன்னடத்தை அடிப்படையில் முன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர், அவர்களில் இஸ்லாமிய சிறைவாசிகள் மட்டும் 20 ஆண்டுகளைக் கடந்தும் விடுதலை மறுக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

 

திமுக ஆட்சி அமைந்த உடன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளை கடந்த சிறைவாசிகள் 700 பேர் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அவர்களை கண்டறிவதற்கு முன்னாள் நீதிபதி ஆதிநாதன் அவர்கள் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

 

தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் இவ்வேளையில் ஆதிநாதன் அவர்களின் அறிக்கையை விரைவாக பரிசீலித்து சாதி, மத, வழக்கு, அரசியல் பேதம் இல்லாமல் அனைத்து சிறைவாசிகளையும் முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற ஜூலை மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் ந.அன்வர் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தாரிக், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அபூபக்கர், வட சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது ரபீக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

தகவல்

 

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி

#MJK_IT_WING

#தலைமையகம்

22.06.2023

 

 

https://www.facebook.com/100063678341242/posts/738018844997387/?d=w&mibextid=SDPelY

Faceinews.com