அச்சிறுபாக்கம் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை – வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்தார்

அச்சிறுபாக்கம் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை – வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்தார்

 

 

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, தெய்வ புலவர் திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம். பி.திறந்து வைத்து திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார்.

 

உலக முழுவதும் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் சார்பில் உலக பொது மறையாம் திருக்குறளை வழங்கிய தெய்வ புலவர் திருவள்ளுவரின் திருவுருவ சிலையை நிறுவி வருகிறது. இது வரையிலும் 155 சிலைகளை அச்சங்கம் அமைத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பாபுராயன் பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவரின் 156 வது சிலை நிறுவப்பட்டுள்ளது, அதன் திறப்பு மற்றும் செ. நல்லசாமி எழுதிய திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி டீன் முனைவர் ம.ஜவஹர்லால் வரவேற்றார்.

 

நிகழ்ச்சிக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் வி. ஜி. சந்தோசம் முன்னிலை வகித்து பேசுகையில்:

 

உலகை தமிழால் உயர்த்துவோம் என்பதற்கு இனங்க உலகில் உள்ள தமிழ் மக்கள் உயர தொழில் பெருக அதற்கான வழி முறைகள் திருக்குறளில் உள்ளது. உன்ன உணவு வேண்டும், அதற்கு விவசாயம் வளர வேண்டும். விவசாயத்தின் பெருமைகளை, அவசியத்தை திருவள்ளுவர் ஒண்ணே முக்கால் வரியில் திருக்குறளில் எழுதி உள்ளார். பல்வேறு தரப்பினருக்கும் தேவையான நல்ல கருத்துக்களை வழங்கி உள்ளார். எனவே திருக்குறள் தந்த திருவள்ளுவர்க்கு உலக முழுவதும் சிலை நிறுவும் பணியை செய்து வருகிறேன். அதன் ஒரு கட்டமாக இந்த கல்லூரியிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளோம் என்றார்.

 

விழாவில் எஸ்ஆர்எம் கல்விக் குழுமங்களின் வேந்தரும் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் பங்கேற்று எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, மூத்த பத்திரிகையாளர் செ. நல்லசாமி எழுதிய திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டு பேசுகையில் :

 

இந்த விழா முப்பெரும் விழாவாக அமைந்து விட்டது, என் பிறந்தநாள் யொட்டி இந்த வேளாண் கல்லூரி வளாகத்தில் 500 மா மரக்கன்றை நட்டேன்,வேளாண்மைக்கும், விவசாயிகளுக்கும் திருக்குறளில் முக்கியத்துவம் அளித்துள்ள திருவள்ளுவரின் சிலையை திறந்துள்ளேன். விவசாயி நல்லசாமி எழுதிய திருக்குறள் பற்றிய இரண்டு நூல்களை வெளியிட்டு உள்ளேன். அந்த நூல்களில் ஒன்றான உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற நூலில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நமது பிரதமர் உலக முழுவதும் பங்கேற்கும் நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார். இது தமிழ் மொழியின் மீது அவர்க்கு உள்ள பற்றிணை இது காட்டுகிறது.

 

விவசாய தொழிலை வறுமை, பாவப்பட்ட தொழில் என்று கூறுவார்கள், இது சரியல்ல விவசாய தொழில் என்பது ஒரு உன்னதமான தொழில், விஞ்சான முறையில் அதனை மேற்கொண்டால் உயரலாம். திருவள்ளுவர் விவசாயத்தை பற்றியும், விவசாயிகளை பற்றியும் பெருமையாக எழுதி உள்ளார், அத்தகைய திருவள்ளுவர்க்கு இங்கு சிலை திறந்து உள்ளதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

 

நிகழ்ச்சியில் நூல் ஆசிரியர் நல்லசாமி ஏர்ப்புரை வழங்கி பேசினார்.

 

நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி, தமிழப் பேராய தலைவர் முனைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் எஸ்ஆர்எம் வளாக அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார்.

Faceinews.com