யூனிட்டிங் ஃபார் ஹோப்: தலசீமியா நல்வாழ்வு சங்கம் நடிகை சுஹாசினி மணிரத்னத்துடன் இணைந்து மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது!

யூனிட்டிங் ஃபார் ஹோப்: தலசீமியா நல்வாழ்வு சங்கம் நடிகை சுஹாசினி மணிரத்னத்துடன் இணைந்து மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது!

சென்னை, 08 மே 2024: உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதிக்கும் மரபணு அடிப்படையில் உண்டாகும் பரம்பரை இரத்தக் கோளாறான தலசீமியாவைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே உருவாக்கும் வகையில் தலசீமியா நலச் சங்கம் [The Thalassaemia Welfare Society] தலசீமியா தினத்தில் [Thalassaemia Day] ஒரு மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது. இந்நிகழ்வில் பிரபல நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, தலசீமியா தடுப்பு யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் பரவலடைய செய்தார்.

தலசீமியா என்பது ஒரு மரபணு சார்ந்த பரம்பரை ரத்தக் கோளாறு ஆகும். மேலும் இது இரத்த சிவப்பணுக்களை தேவையான அளவு உருவாக்கும் நம் உடலின் திறனை வெகுவாக தடுக்கிறது. இதன் விளைவாக தலசீமியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சோகை ஏற்படுகிறது. தலசீமியாவினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இதன் பாதிப்பு அறிகுறியற்றதாக இருந்தாலும், கணவன் – மனைவி என இருவரும் தலசீமியாவினால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் இந்த பரம்பரை மரபணு ரத்தக் கோளாறினால் பாதிக்கப்பட 25% வாய்ப்புகள் இருக்கின்றன. இது பின்னாளில் அவர்களும் தலசீமியாவினால் கடுமையாக பாதிக்கப்பட வழிவகுக்கும். கடுமையான தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிருடன் இருக்க, ப்ளட் ட்ரான்ஃபியூஷன்ஸ் [regular blood transfusions] எனப்படும் இரத்தமாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவில், தலசீமியாவின் பாதிப்பு 3.9% ஆக உள்ளது. அதாவது தலசீமியாவின் பாதிப்புள்ள, தங்களது குழந்தைகளுக்கும் கடத்த வாய்ப்புகள் உள்ளவர்கள் சுமார் 40 மில்லியன் என்றும் தலசீமியா மேஜர் ஆக மாறும் வாய்ப்புகளுடன் 10,000 குழந்தைகள் ஆண்டொன்றுக்குப் பிறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தலசீமியா குறித்த விழிப்புணர்வு மற்றும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ள கூடிய எளிமையான ரத்த பரிசோதனை மூலம், நம் நாட்டில் தலசீமியாவில் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க முடியும்.

பிரபல நடிகை திருமதி.சுஹாசினி மணிரத்னம் [Ms. Suhasini Maniratnam, acclaimed actress] கூறுகையில், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் அந்த பாதிப்பை சமாளிக்க உதவும் வகையில் ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது நம் எல்லோருடைய பொறுப்பு ஆகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்தவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் இந்த பரம்பரை ரத்தக்கோளாறை தவிர்க்க முடியும். இதைத் தவிர்க்கலாம். தலசீமியா நல்வாழ்வு சங்கத்தின் இந்த மாபெரும் முக்கிய நிகழ்வில் பங்களிக்கும் வகையில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் கேன்சர் சென்டரின் குழந்தைகளில் ரத்த கோளாற்றை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் பீடியாட்ரிக் ஹெமடாலஜிஸ்ட் டாக்டர் ரேவதி ராஜ் [Dr. Revathi Raj, Pediatric Hematologist at Apollo Hospitals Cancer Centre] கூறுகையில், “தலசீமியா இந்தியாவில் ஒரு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு சுகாதார சவாலாக இருப்பதை உணர்த்துகிறது. இது ஒரு மருத்துவ நிலை மட்டுமல்ல; இது கருணை, விழிப்புணர்வு மற்றும் ஒன்றிணைந்து செயல்படுத்தும் நடவடிக்கைக்கான ஒரு முக்கிய அழைப்பாக உருபெற்று இருக்கிறது. நம் எல்லோருடைய கூட்டு முயற்சிகளின் மூலம், இது குறித்த விழிப்புணர்வின் மூலம் சமூகங்களை மேம்படுத்தலாம், அத்தியாவசிய மருத்துவ பராமரிப்பை வழங்கலாம் மேலும் தலசீமியாவின் பாதிப்பில்லாத குழந்தைகளுடன் கூடிய எதிர்காலத்தை முன்னெடுக்கலாம்’’ என்றார்.

இந்தியாவில் தலசீமியாவின் தாக்கம், நோயறிதல் நடைமுறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு உத்திகள் குறித்து இந்த நிகழ்ச்சி மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் தலசீமியா பற்றி பரவலாக இருக்கும் கட்டுக்கதைகளை உடைக்கவும், உடனடியாக பாதிப்பை கண்டறிதல் மற்றும் தக்க சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இங்குள்ள இத்துறை வல்லுநர்கள் கலந்துரையாடலையும் மிகவும் பயனுள்ள வகையில் நடத்தினர்.

 

 

 

 

Faceinews.com