காவேரி மருத்துவமனையின் வெற்றி : சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை. எண்பதுகளில் இருக்கும் வயதான ஒருவரது மூளையிலிருந்த பெரிய கட்டியை, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்!!!

சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை. எண்பதுகளில் இருக்கும் வயதான ஒருவரது மூளையிலிருந்த பெரிய கட்டியை, ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

 

சென்னை, இந்தியா (25 நவம்பர் 2023): 81 வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டனில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதுவும் அவள் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது.

 

அமெரிக்காவில் அவர் கலந்தாலோசித்த மருத்துவர்கள், மேற்கூறிய நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ். அவர்களின் வலது காதின் கேட்கும் திறன் குறைவையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் கவனித்தனர். மேலும் பரிசோதணையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தக் கட்டி, செவியின் கேட்கும் திறனை வழங்கும் நரம்பில் உருவாகியிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்தனர். திருமதி கே.எஸ். அவர்களும், அவரது குடும்பத்தினரும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றனர். காணொளி வாயிலாக, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவர் திரு. கிரிஷ் ஸ்ரீதரிடம் நிகழ்ந்த சில கலந்தாய்வுக்குப் பிறகு, அவரிடமே சிகிச்சை பெறலாம் என்ற முடிவினை எடுத்துள்ளனர்.

 

 

இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயின்-இன் வழிகாட்டியும் இயக்குநருமான மருத்துவர் திரு. கிரிஷ் ஸ்ரீதர், “நாங்கள் செவி நரம்பில் ஏற்பட்ட ஒரு பெரிய கட்டியை (Vestibular Schwannoma) அகற்ற வேண்டியிருந்தது. இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க கிட்டத்தட்ட 10 மணிநேரம் ஆனது. இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்வது எப்போதுமே சவாலானது. அதிலும் குறிப்பாக திருமதி கே.எஸ். அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற பெரிய கட்டியாக (விட்டம் 4.5 செமீக்கு மேல்) இருக்கும் பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்வது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கும். உயர்நிலை இயக்க நுண்ணோக்கியைப் பயன்படுத்திக் கட்டியை அகற்றும்போது, விழுங்குதல், பேச்சு மற்றும் முகத்துடன் தொடர்புடைய முக்கியமான அதிநுண் நரம்புகள் பாதிப்படையாதவாறு கவனத்துடன் செயற்பட்டதோடு, நரம்பியல் மண்டலத்தைத் தொடர்ந்து கண்காணித்தபடி, அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம்.

 

வெற்றிகரமான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, இரண்டு நாட்களில் திருமதி கே.எஸ். நடக்கத் தொடங்கினார். ஏழாவது நாளில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்டார். மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க, தனது பிசியோதெரபி அமர்வுகளைத் தொடர்ந்தவர், நல்ல ஆரோக்கியத்துடன் திடமாக அமெரிக்காவிற்குத் திரும்பினார்.

 

அநேகம் பேர், தங்களுக்கோ தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ 70 வயதிற்கு மேல் இருந்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பயப்படுகின்றனர். தற்போது, சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தொழில்நுட்பமும், தொடர் கண்காணிப்புக்கான வசதியும், மயக்க மருந்து அளிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், அறுவை சிகிச்சையின் பொழுது நேரும் அபாயங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளன. மிகக் கடினமான மூளைக் கட்டிகளுக்குக் கூட, நோயாளி மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், எந்த வயதினராக இருந்தாலும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படக்கூடும்” என்றார்.

 

காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரெயின் & ஸ்பைனின் குழு, மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றி, திருமதி கே.எஸ். அவர்களின் முந்தைய உடல்நிலையைத் திரும்பிப் பெறச் செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். நல்ல ஆரோக்கியத்திற்காகவும், ஊக்கமுறு வாழ்க்கைக்காகவும் திருமதி கே.எஸ். அவர்களை வாழ்த்துகிறோம்.

 

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

Faceinews.com