நிப்பான் பெயிண்ட் இந்தியா 2023 AYDA விருது வென்றவர்களை அறிவிக்கிறது!!

நிப்பான் பெயிண்ட் இந்தியா 2023 AYDA விருது வென்றவர்களை அறிவிக்கிறது

வெற்றியாளர்களான பெங்களூருவைச் சேர்ந்த எரோமிதா ரமேஷ் மற்றும் மும்பையைச் சேர்ந்த சூரஜ் இகே ஆகியோர் மதிப்புமிக்க விருதுகளை வென்றனர்.

AYDA குளோபல் விருதுகளில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

6 பிப்ரவரி 2024, செவ்வாய், சென்னை: ஆசியா பசிபிக் நாட்டின் முன்னணி பெயிண்ட் தயாரிப்பாளரான நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் டெக்கரேட்டிவ் பிரிவு, வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை உலகின் இளம் மனதைக் கவரும் வகையில் AYDA 2023-2024 இன் இந்திய இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்தது. AYDA இன் இந்தப் பதிப்பு “CONVERGE: Championing purposeful designs – Building Empact through Design” என்ற கருப்பொருளுக்காக நடத்தப்பட்டது.

AYDA இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் 6 பிப்ரவரி’24 அன்று ஹோட்டல் ஃபெதர்ஸில் அறிவிக்கப்பட்டது. அங்கு பான்-இந்தியா கல்லூரிகளின் இறுதிப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 2000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து நடுவர்கள் 24 இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

புகழ்பெற்ற நடுவர் குழுவில் பின்வருபவர்களும் இருந்தனர்:

1. அர். சரண்யா பிரேம்குமார் – இணை முதல்வர் & இயக்குனர், வெர்னேகர் அசோசியேட்ஸ்

2. அர். மகேஷ் ராதாகிருஷ்ணன் – நிறுவன பங்குதாரர், MOAD

3. அர். கபில் சிட்டாலே – பார்ட்னர், சிட்டாலே & Son

4. அர். பிரிஜேஷ் ஷைஜல் – இயக்குனர்/முதன்மை கட்டிடக் கலைஞர், DAC

5. அர். ஏக்தா அஹுஜா – நிறுவனர், தேஜோமயா கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உள்துறை வடிவமைப்பாளர்கள்

6. அர். கவிதா சாஸ்திரி – முதன்மை கட்டிடக் கலைஞர், கேஎஸ் டிசைன்ஸ்

இளம் வடிவமைப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட ஆர்வத்துடன் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கங்களை உருவாக்குதல் என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக அமைந்திருந்தது

AYDA விருதுகள் அடுத்தடுத்த தலைமுறையின் வடிவமைப்புத் திறமைகளை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வையோடு நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தால் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த விருது கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு மாணவர்களுக்கு குறுக்கு கற்றல் வாய்ப்புகள் ( Cross Learning Opportunities ) மற்றும் பிராந்தியத்தில் உள்ள முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் சக கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு சகாக்களுடன் நெட்வொர்க்கிங் மூலம் அவர்களின் திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. அதுமுதல், அனைவரும் அடைய விரும்பும் விருதாக AYDA உயர்ந்துள்ளது.

பல ஆண்டுகளாக, புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் வடிவமைப்பு துறையில் முக்கிய நபர்களுடன் ஈடுபட பல்வேறு வாய்ப்புகளை வழங்கி AYDA ஆயிரக்கணக்கான இளம் மற்றும் திறமையான மாணவர் வடிவமைப்பாளர்களை தன்பால் ஈர்த்துள்ளது

கூடுதலாக, அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைக் கொண்டு பட்டறை பயிற்சிகள் (work-shops) நடத்துவதன் மூலம் பங்கேற்பாளர்கள் முதல்-நிலை தொழில் அறிவு, தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி பெறுவதற்கும் வழிகாட்டுதல் மற்றும் திறன்களை வளர்ப்பதற்கும் இந்த தளம் உதவுகிறது.

நிப்பான் பெயிண்ட் (இந்தியா) அலங்காரப் பிரிவின் தலைவர் திரு. மகேஷ் ஆனந்த் , புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உள்துறை வடிவமைப்பாளர்கள் குழுவுடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு இந்த விருதினை வழங்கினார்.

திரு. மகேஷ் ஆனந்த், தலைவர் – அலங்காரப் பிரிவு, நிப்பான் பெயிண்ட் (இந்தியா) தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார், “AYDA மூலம் இளம் கனவுகளை வளர்ப்பது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. பல இளம் ஆர்வமுள்ள கட்டிடக்கலைஞர்களுக்கு வெற்றியை நோக்கி இது ஒரு படிக்கல்லாக மாறியுள்ளது.

வெற்றியாளரான எரோமிதா ரமேஷ், “AYDA ஒரு அற்புதமான தளம். அபரிமிதமான கற்றல் இருந்தது, சென்னையில் நடந்த இறுதிப்போட்டியின் அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். நிப்பான் பெயிண்ட் இந்தியாவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். சர்வதேச இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்

சூரஜ் இகே தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார், ”எனக்கு அற்புதமான தளத்தினை வழங்கிய நிப்பான் பெயிண்ட் இந்தியாவிற்கு மிக்க நன்றி.இந்த அனுபவம் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. இந்த நேரத்தில் எனது கல்லூரிக்கும் , வழிகாட்டிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

9 பிரிவுகளின் கீழ் விருதுகளும் வழங்கப்பட்டன:

சிறந்த துணை கல்லூரி

Best Supporting College டாக்டர்.எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

சிறந்த கல்வி நிறுவனம்

ஆர்.வி கட்டிடக்கலை கல்லூரி பெங்களூர்

சிறந்த வழிகாட்டி

(Best Mentor) 1.திரு.யாக்னிக் பதிஜா, ரச்சனா சன்சாத் – அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர், மும்பை

3.திருமதி.தீபிகா காமேஸ்வரன், கட்டிடக்கலை பீடம், Dr.M.G.R கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

சிறப்பு குறிப்பு

(Special Mention) கிரசண்ட் ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர்

சிறந்த பசுமை கண்டுபிடிப்பு ரஞ்சிதா என் பி – ஆர் வி கல்லூரி ஆர்க்கிடெக்சர், பெங்களூரு

சிறந்த வண்ணத் தேர்வு

லிரோன் கோன்சால்வ்ஸ் – விவா ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், ஷிர்கான்-விரார்

கௌரவ குறிப்பு

த்விஷா ராம்புரா – கமலா ரஹேஜா வித்யாநிதி இன்ஸ்டிடியூட் ஃபார் ஆர்க்கிடெக்சர் அண்ட் என்விரான்மென்டல் ஸ்டடீஸ், மும்பை

அமிதா சரோயா- ரிஸ்வி காலேஜ் ஆஃப் ஆர்க்கிடெக்சர், மும்பை

வெள்ளி வென்றவர்

உள்புற வடிவமைப்பில் வெள்ளி:

அக்ருதி ஷா – ஆர் வி காலேஜ் ஆஃப் ஆர்க்கிடெக்சர், பெங்களூரு

கட்டிடக்கலையில் வெள்ளி:

ஷ்ரேயான்ஷ் இத்தாலியா – கமலா ரஹேஜா வித்யாநிதி இன்ஸ்டிடியூட் ஃபார் ஆர்க்கிடெக்சர் அண்ட் என்விரான்மென்டல் ஸ்டடீஸ், மும்பை

தங்கம் வென்றவர்

உட்புற வடிவமைப்பில் தங்கம்:

சூரஜ் இகே – அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர், மும்பை

கட்டிடக்கலையில் தங்கம்:

எரோமிதா ரமேஷ் – ஆர் வி காலேஜ் ஆஃப் ஆர்க்கிடெக்சர், பெங்களூரு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Faceinews.com