கிரெடாய் ‘பேர்ப்ரோ 2024’ சொத்து -ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது 

கிரெடாய் ‘பேர்ப்ரோ 2024’ சொத்து -ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது

 

~ 200 மேற்பட்ட திட்டங்களுடன் ‘பேர்ப்ரோ 2024’ மார்ச் 8 முதல் 10 வரை நடைபெறுகிறது ~

 

சென்னை, பிப். 26 2024: ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் உச்ச அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை மண்டலம் (கிரெடாய்) சார்பில் 16வது ஆண்டாக ‘பேர்ப்ரோ 2024’ சொத்து – ரியல் எஸ்டேட் கண்காட்சி அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை கிரெடாய் பேர்ப்ரோ 2024 விளம்பர தூதர்களான நடிகைகள் சுஹாசினி மணிரத்னம் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

இந்த கண்காட்சியில் பல்வேறு கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களின் 200க்கும் மேற்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்த உள்ளன. வீடு மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் வீட்டு மனைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இதில் 32.5 மில்லியன் சதுர அடி குடியிருப்புகள், 0.25 மில்லியன் சதுர அடி வணிக வளாகங்கள் மற்றும் 325 ஏக்கர் வீட்டு மனைகள் என ஏராளமான திட்டங்கள் இடம் பெற உள்ளன. இக்கண்காட்சிக்கான பிரதான ஸ்பான்சராக எஸ்பிஐ வங்கி உள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, எல்ஐசிஎச்எப்எல் மற்றும் டாடா கேபிடல் உள்ளிட்டவையும் இக்கண்காட்சிக்கான ஸ்பான்சராக உள்ளன. இந்த வங்கிகள் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குவதோடு பிரத்யேக சலுகைகளையும் வழங்க இருக்கிறார்கள்.

இந்த பிரமாண்ட கண்காட்சியின் முன்னோட்டமாக தி.நகர் விஜயா மகாலில் மார்ச் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை வீட்டுக் கடன் மேளா நடைபெறுகிறது. வீட்டுக் கடன் மேளாவின் போது, இந்த வங்கிகள் வழங்கும் சிறப்பு சலுகைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறப்படும். இதில் வீடு வாங்குபவர்கள் தங்கள் வீட்டுக் கடனை முன் அனுமதி பெற்று அதிகபட்ச நிதியைப் பெறலாம். அவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகையின் அடிப்படையில் கண்காட்சியில் அவர்களுக்கு ஏற்ற வீடு அல்லது பிளாட்டை அவர்கள் வாங்க முடியும்.

 

‘பேர்ப்ரோ 2024’ கண்காட்சி குறித்து கிரெடாய் சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், ‘பேர்ப்ரோ 2024’ என்பது சென்னையின் மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் கண்காட்சியாகும். கிரெடாய் அமைப்பால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட கிரெடாய் உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 15 லட்ச ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரையிலான சொத்துகள் இதில் இடம்பெற உள்ளன. மேலும் இதில், 8 வங்கிகளும் பங்கேற்க உள்ளன. அவர்கள் கவர்ச்சிகரமான பல்வேறு சலுகைகளை வீடு வாங்குபவர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். சென்னையில் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வீடுகளில் 82.6 சதவீத சந்தைப் பங்கை கிரெடாய் உறுப்பினர்கள் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பக்கீர் முகமது கூறுகையில், தொழில் அடிப்படையில், நாங்கள் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பணியமர்த்துகிறோம், அதே போல் இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலை வழங்கும் அமைப்பாக கிரெடாய் உள்ளது. இந்த ஆண்டு, கண்காட்சிக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதனால் கட்டுமானம், நிதி, நுகர்வோர் பொருட்கள், போன்ற பிற தொடர்புடைய துறைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

 

 

கிரெடாய் சென்னை, செயலாளர் க்ருதிவாஸ் கூறுகையில், குடியிருப்பு மற்றும் வணிகத் துறைகளில் தேவை அதிகரித்து வருவதை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது விற்பனையாகாத குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ள அதே வேளையில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவு அதிகரிப்பின் காரணமாக சொத்து விலைகள் அதிகரித்து வருகின்றன என்று தெரிவித்தார்.

 

பேர்ப்ரோ 2024 கண்காட்சிக்கான விளம்பர தூதர் நடிகை சுஹாசினி மணிரத்னம் கூறுகையில், சென்னையில் உள்ள 75 க்கும் மேற்பட்ட சிறந்த கட்டுமான மேம்பாட்டு நிறுவனங்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால், வருங்கால வீட்டு உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். அனைவருக்கும் வீடு என்ற திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், வீடு தேடுபவர்கள் வீட்டு உரிமையாளர்களாக மாறுவதை உறுதி செய்ய கிரெடாய் சென்னை தனது பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

 

மற்றொரு விளம்பர தூதரான பிரியா பவானி சங்கர் கூறுகையில், பார்வையாளர்களின் வசதிக்காக கிரெடாய் பேர்ப்ரோ, மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது. இது அங்கு இடம் பெற்றுள்ள ஸ்டால்கள் மற்றும் வசதிகள் குறித்து அறிந்து கொள்ளவும், கட்டுமான நிறுவனங்கள், ஸ்பான்சர்கள், வங்கியாளர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், 3 நாட்கள் அங்கு நடைபெறும் நிகழ்ச்சி அட்டவணை பற்றிய தகவல்களைப் பெறவும் உதவுகிறது என்று தெரிவித்தார்.

Faceinews.com