புது ஸ்கெட்ச் போடும் பாஜக!! களத்தில் இறங்கி கலக்கும் சதீஸ் ராஜா… கலக்கத்தில் காங்கிரஸ்!

பாஜக போடும் புது ஸ்கெட்ச்!

களத்தில் சதீஸ் ராஜா…கலக்கத்தில் காங்கிரஸ்!

 

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி தமிழகத்தின் மற்ற தொகுதிகளைவிட மிக, மிக வித்தியாசமானது. இங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டும் சமபலத்துடன் உள்ளது. இதனால் இம்முறையும் இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவுகின்றது.

இந்நிலையில் பாஜக இம்முறை குமரி தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டுகிறது. இதனால் புதுவியூகம் ஒன்றையும் வகுத்துள்ளது. இப்போதைய நிலவரப்படி கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்தே மீண்டும் களம் இறங்கும் வாய்ப்பு எழுந்துள்ளது. அதிமுக பசிலியான் நசரேத் என்பவரைக் களத்தில் இறக்குகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பலரும் முட்டி மோதுகின்றனர். இதில் சீனியர்களான பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தர்ராஜன் பெயரும் இருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் 9 முறை இதேதொகுதியில் போட்டியிட்டு இருமுறை வெற்றியும் பெற்றவர். தமிழிசை தமிழக பாஜக தலைவராக இருந்தவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இப்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜனும் இதே தொகுதியைக் குறிவைக்கிறார். சீட் கிடைத்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவும் ஆயுத்தம் ஆகிவருகின்றார்.

 

களத்தில் சதீஸ் ராஜா!

 

இவர்களுக்கு இணையாக ரேஸில் இருக்கிறார் சதீஸ் ராஜா. பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருக்கும் சதீஸ் ராஜாவுக்கு 39 வயதே ஆகிறது. இம்முறை இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு இருக்கும் அண்ணாமலை என பெரிதாக நம்பி களப்பணி செய்கிறார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இவர் ஏராளமான மக்கள் பணிகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கி இருந்தார். 12 ஆண்டுகளாக பாஜகவில் தீவிரமாக பயணித்து வருகிறார்.

 

இவரை மையப்படுத்தி இன்னொரு புது வியூகமும் கூறப்படுகிறது. சதீஸ் ராஜா, ஆர்.சி கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். அவரது மனைவி இந்து நாடார் சமூகம். பொதுவாகவே குமரி பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக கபளீகரம் செய்துவிடுவது தொடர்கதையாக உள்ளது. இப்படியான சூழலில் சதீஸ்ராஜா பெயரும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ளது. பாஜகவின் இந்த வியூகத்தால் வழக்கமாக சிறுபான்மை வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் காங்கிரஸ் முகாம் கலக்கத்தில் உள்ளது.

Faceinews.com