மகளிர் தினத்தையொட்டி பெண் பணியாளர்களுக்காக பாதுகாப்பு மற்றும் தற்காப்பு பயிலரங்கை நடத்திய ஓரியன் இன்னோவேஷன்

மகளிர் தினத்தையொட்டி பெண் பணியாளர்களுக்காக பாதுகாப்பு மற்றும் தற்காப்பு பயிலரங்கை நடத்திய ஓரியன் இன்னோவேஷன்

சென்னை, 8 மார்ச் 2024: டிஜிட்டல் புத்தாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கிற மற்றும் அச்செயல்பாட்டை துரிதப்படுத்துகிற செயல்பாட்டில் ஈடுபட்டுவரும் முன்னணி நிறுவனமான ஓரியன் இன்னோவேஷன் (‘Orion’), மகளிர் தின நிகழ்வை சிறப்பாக கொண்டாடியது. இதன் அலுவலகத்தில் மார்ச் 08-ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மீது பெண்கள் திறனதிகாரம் பெறும் குறிக்கோளை கொண்ட சிறப்பான அமர்வுகளை புகழ்பெற்ற தற்காப்பு கலைப் பயிற்சியாளர் ஹேமந்த் முரளிகணேஷ் நடத்தினார்.

பெண்களின் சுதந்திரம், தைரியம் மற்றும் நம்பிக்கைக்கான அவசியம் அதிகரித்து வருவதை நன்கு உணர்ந்திருக்கும் ஓரியன், அதன் பெண் பணியாளர்களுக்கு அடிப்படையான தற்காப்பு பயிற்சியினை வழங்குவதன் மூலம் இத்தேவையை பூர்த்தி செய்வதற்கு தன்முனைப்புடன் களம் இறங்கியிருக்கிறது. வேறுபட்ட பல்வேறு சூழ்நிலைகளிலும் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் பதில்வினையாற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு நேரடி செய்முறை விளக்கங்கள் வழியாக நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் திறன்மிக்க தற்காப்பு உத்திகளை பெண் பணியாளர்களுக்கு கற்று தருவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

இந்த சிறப்பான முன்னெடுப்பு திட்டம் குறித்து இந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான மனிதவளத் துறை தலைவர். திரு அருண் பால் கூறியதாவது, “பெண்கள் திறனதிகாரம் பெறுவதை பெரிதும் ஊக்குவிப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சூழ்நிலைகள் குறித்து அத்தியாவசிய விழிப்புணர்வு பயிற்சியை எமது பெண் பணியாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இதற்கு நல்ல பங்களிப்பை வழங்குவதே எமது நோக்கமாகும். தாக்குதல்கள் உட்பட சாத்தியமுள்ள ஆபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு திறம்பட பதிலடி கொடுக்கவும், உரிய முறையில் பதில்வினையாற்றவும் இந்த முன்னெடுப்பு அவர்களை ஏதுவாக்கும். மகளிர் தினம் அனுசரிக்கப்படும் இந்நாள் வழங்கும் உத்வேக உணர்வோடு சேர்த்து தனிப்பட்ட பாதுகாப்பில் தைரியத்தையும், திறனதிகாரம் பெற்ற உணர்வையும் இந்த அமர்வுகள் அவர்கள் மனதில் ஆழமாக பதிக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். அதற்கும் கூடுதலாக, எமது பெண் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை இன்னும் மேம்படுத்தும் நோக்கத்தோடு இன்னும் பல துணை செயல்பாடுகளையும் நாங்கள் ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறோம்.”

தற்காப்பு பயிற்சி அமர்வை தொடர்ந்து அதுகுறித்த கேள்வி மற்றும் பதில் அமர்வும் நடைபெற்றது. தற்காப்பு தொடர்பான கேள்விகள் அல்லது குறிப்பிட்ட கவலைகளுக்கு தெளிவான விளக்கம் பெறுவதற்கான வாய்ப்பை இது வழங்கியது. இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும், பயிற்சி அமர்வுகளும் வாழ்நாள் முழுவதிலும் நிலைத்து நீடிக்கிற நம்பிக்கையையும், சக்தி உணர்வையும் உருவாக்குகின்றன.

பணி அமைவிடத்தில் பெண்களின் திறனதிகாரத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகாலமாகவே ஓரியன் முன்னுரிமை வழங்கி வந்திருக்கிறது. ஓராண்டிற்கு முன்பு, “Reboot with Orion” என்ற செயல்திட்டத்தை இந்நிறுவனம் தொடங்கியது; தங்களது கரியரில் இடைவெளி ஏற்பட்டதற்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்புகிற புதிய பெண் பணியாளர்களுக்கு ஆதரவு அளிக்கவும் மற்றும திறனதிகாரம் பெற செய்வதும் இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும். திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் என்ற இரு அடிப்படை கூறுகள் மீது இந்த Reboot with Orion செயல்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

திறன் மேம்பாடு (Upskilling): பெண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அவர்களது துறையில் சமீபத்திய தொழில்நுட்ப, துறை/தளம் சார்ந்த மற்றும் செயல்முறை தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டுள் நான்கு வார வரிவான பயிற்சி திட்டம் இதில் இடம்பறுகிறது. புதிய திறன்களை விரைவாக அவர்கள் பெறுவதை ஏதுவாக்குவது இதன் குறிக்கோளாகும்; புதிய பணியாளர்களை விட பத்து மடங்கு அதிவேக விகிதத்தில் பணியில் செயல்திறனை பெறுமாறு செய்வதே இதன் நோக்கம்.

வழிகாட்டல் (Mentoring) – இந்த செயல்முறையில், ரீபுட் செயல்திட்டத்தின் பங்கேற்பாளர்கள் ஓரியன் நிறுவனத்தில் உயர்பொறுப்பு வகிக்கும் பெண் தலைவர்களோடு இணைக்கப்படுகின்றனர். அனுபவம் வாய்ந்த இத்தலைவர்கள் வழக்கமான கூட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நேரடி அமர்வுகள் வழியாக தொடர்ந்து வழிகாட்டலையும், ஆதரவையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகின்றனர். பணி அமைவிட இயங்கியல் அம்சங்களிலிருந்து பணி சார்ந்த முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட நலவாழ்வு அம்சங்கள் வரை வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Faceinews.com