நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !
மறைந்த உயர்திரு தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை சார்பில், 28 – 05 – 2024 செவ்வாய் காலை, சென்னை, கோயம்பேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது !
தோழர் த. மணிவண்ணன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த விழாவிற்கு புலவர் இரத்தினவேலன் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் !
சுதந்திர போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களும், உலக தமிழ் மக்களின் ஒரே தலைவர் ஐயா பழ நெடுமாறன் அவர்களும் இணைந்து ஆயிரம் பேருக்கு ஐந்து லட்சம் மதிப்பு உள்ள இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தனர் !
இதை தொடர்ந்து கல்வி உதவி தொகை மற்றும் 2000 தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது !
இந்த நிகழ்வில், இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் சிவாஜி லிங்கம், ரோஜா முத்தையா கல்வி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் உயர்திரு சுந்தர் கணேசன், தோழர் யா.அருள், தோழர் ஆவல் கனேசன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் !


