அப்போலோ மருத்துவமனைகள் உலகிலேயே முதல் முறையாக இடம் மாறி அமைந்திருக்கும் சிறுநீரகமுடைய உயர் இரத்த அழுத்த நோயாளிக்கு சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் முறையுடன் ரெனல் டினெர்வேஷன் தெரபியை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது!

அப்போலோ மருத்துவமனைகள் உலகிலேயே முதல் முறையாக இடம் மாறி அமைந்திருக்கும் சிறுநீரகமுடைய உயர் இரத்த அழுத்த நோயாளிக்கு சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் முறையுடன் ரெனல் டினெர்வேஷன் தெரபியை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது!

அப்போலோ மருத்துவமனைகள் சிறுநீரகம் உடலில் இடம் மாறி இருக்கும் நோயாளிக்கு எளிதில் கட்டுப்படாத உயர் இரத்த அழுத்தத்திற்கான [Resistant Hypertension in Ectopic Kidney Patient ] சிகிச்சையளித்திருப்பதன் மூலம் மருத்துவ துறையில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது.

சென்னை, 30 மே 2024: சென்னையில் அப்போலோ மருத்துவமனை, தனது உடலில் சிறுநீரகம் இடம் மாறி அமைந்திருக்கும் [ectopic kidney] நோயாளிக்கு, உலகிலேயே முதல் முறையாக சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் ரீனல் டெனெர்வேஷன் (ஆர்டிஎன்) சிகிச்சையை [Simplicity Spyral renal denervation (RDN) therapy] வெற்றிகரமாகச் செய்து மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. டாக்டர். ரெஃபாய் செளகத் அலி மற்றும் அவரது குழுவினர், மற்ற மருத்துவ முறைகள் பயனளிக்காத, கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் அவதிப்பட்டு வந்த 58 வயது நோயாளிக்கு இந்த முன்னோடித்துவமுள்ள மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தம், 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினரை எளிதில் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் 5mmHg அளவுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைத்தால் கூட பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 34% வரை தடுக்க முடியும். மேலும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் ஆக்ஸிஜன் அளவும் குறைவதால் உண்டாகும் இதய பாதிப்பை [ischemic heart disease] 21%-மும், இறப்பை 13%-மும் குறைக்க முடியும்.

58 வயதான நோயாளிக்கு, இடது பக்கம் இருக்க வேண்டிய சிறுநீரகம் [ectopic left kidney], வலதுபக்கம் இலியாக் ஃபோஸாவில் [right iliac fossa] இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் இது இரண்டு தனித்தனி சிறுநீரக தமனிகளால் மூலம் செயல்பட்டதும் தெரியவந்தது. இது மிகவும் அரிதாக, ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும் உடற்கூறியல் மாறுபாடு என்பது குறிப்பிடத்தக்கது. அதிநவீன ஆர்டிஎன் [RDN] சிகிச்சையானது இரண்டு சிறுநீரக தமனிகளில் கதிரியக்க அதிர்வெண்களின் மூலம் அவற்றின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பதால் ரத்த ஓட்டமும் கட்டுப்படுத்தப்படும் மருத்துவ நடைமுறையை உள்ளடக்கியதாகும். மேலும் இந்த மருத்துவ நடைமுறை நோயாளியின் இரத்த அழுத்தத்தை ஒரு நாளுக்குள் 160/100 mmHg என்ற அளவிலிருந்து 130/80 mmHg ஆகக் கணிசமாகக் குறைக்கவும் உதவியது. இதனால் அந்நோயாளி அடுத்த நாள் டிநஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு முன்பு அவர் உட்கொண்ட ஐந்து மருந்துகளுக்கு பதிலாக, இப்போது இரண்டு மருந்துகள் மட்டுமே அவருக்கு தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர். ரெஃபாய் செளகத் அலி [Dr. Refai Showkathali, Senior Consultant, Interventional Cardiology, Apollo Hospitals Chennai] கூறுகையில், “எக்டோபிக் கிட்னி பாதிப்பு உள்ள நோயாளிக்கு உலகிலேயே முதல் முறையாக சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் ஆர்டிஎன் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட நோயாளிகளின் உடல்நிலையில் இருக்கும் முன்னேற்றம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நோயாளிகள் இனி அதை சமாளிக்கும் ஆற்றலை பெற இச்சிகிச்சை ஆதரவுக்கரம் நீட்டுவதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது’’ என்றார்.

உலகளவில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 20,000 மருத்துவ நடைமுறைகளில், உலக முழுவதிலும் உள்ள எக்டோபிக் சிறுநீரக பாதிப்புள்ளவர்களில், எஃப்.டி.ஏ-அங்கீகரிக்கப்பட்ட சிம்ப்ளிசிட்டி ஸ்பைரல் ஆர்.டி.என் கதீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் மருத்துவ நடைமுறை இதுதான் [FDA-approved Simplicity Spyral RDN catheter in ectopic kidneys worldwide] என மெட்ட்ரானிக் க்[Medtronic Global] உறுதிப்படுத்தியுள்ளது.

உடல்நல பிரச்சினைகளுக்கு ஏற்ற மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் என இந்த இரண்டு அம்சங்களும் உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சைகளில் முன் நிற்கின்றன. இருப்பினு ஒரு, சில நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு ஆர்டிஎன் போன்ற மருத்துவ நடமுறைகள் கூடுதலாக தேவைப்படலாம். இந்த மாபெரும் மைல்கல் சாதனையானது, இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறையில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் தலைமைத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. மேலும் நோயாளிகள் குணமடைவதை மேம்படுத்தும் வகையில் நவீன மருத்துவ முன்னேற்றங்களில் கொண்டிருக்கும் அதன் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

அப்போலோ மருத்துவமனை குறித்து

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், ஒரு மில்லியன் பேருக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.

 

 

 

Faceinews.com