சென்னையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியிருக்கும் ஜிஎம் மாடுலர்

சென்னையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியிருக்கும் ஜிஎம் மாடுலர்

சென்னை, 19 ஜூலை 2024: மின்சாதனங்கள் தொழில்துறையில் பிரபலமாக திகழும் பிராண்டான ஜிஎம் மாடுலர், சென்னை மாநகரில் 4,500 சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. வாடிக்கையாளரின் வசதி மற்றும் நலனை கருத்தில் கொண்டிருக்கும் இந்நடவடிக்கை, இப்பிராந்தியத்தில் ஜிஎம் மாடுலர் நிறுவனத்தின் விரிவாக்கத்தை குறிக்கும் முக்கிய மைல்கல் நிகழ்வாக அமைந்தது. தனது தயாரிப்புகளை நுகர்வோர்கள் நேரில் பார்த்து அனுபவ ரீதியாக அவற்றை வாங்கும் வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.

சென்னையின் மையப்பகுதியான மவுண்ட் ரோடில் பிரெஸ்டிஜ் சக்ரியா மெட்ரோபொலிடன் வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஜிஎம் மாடுலரின் பிராண்டு தூதரும் மற்றும் பிரபல பாலிவுட் நடிகருமான திரு. சுனில் ஷெட்டி திறந்து வைத்தார். நவீன அழகியல் அம்சங்களுடனும் மற்றும் இன்டராக்டிவ் டிஸ்ப்ளே சாதனங்கள் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மையம் ஒரு வியக்க வைக்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது; ஜிஎம் மாடுலர் நிறுவனத்தின் பிரபலமான மாடுலர் ஸ்விட்சுகள், இல்லங்களுக்கான ஆட்டோமேஷன் சாதனங்கள், அலங்கார விளக்குகள், மின்விசிறி மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் உட்பட இதன் சமீபத்திய தயாரிப்புகள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் நேரில் பார்த்து ஆராய்ந்து தேர்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த எக்ஸ்பீரியன்ஸ் மையம் வழங்குகிறது.

ஜிஎம் மாடுலர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் & நிர்வாக இயக்குநர் திரு. ஜெயந்த் ஜெயின் பேசுகையில், “சென்னை மாநகரில் எமது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறந்து வைப்பதில் நாங்கள் அதிக உற்சாகம் கொள்கிறோம். ஜிஎம்-ஐ பொறுத்தவரை சென்னை ஒரு மிக முக்கிய சந்தையாகும். இங்கு எமது தயாரிப்புகளுக்கு தேவை அதிகரித்து வரும் நிலையில் எமது தயாரிப்புகள் அனைத்தையும் கண்டு, ஆராய்ந்து தேர்வு செய்வதற்கு ஒரு முழுமையான வாய்ப்பின் மூலம் ஒரு இனிய அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் விரும்பினோம். இந்த புதிய மையம் எமது சமீபத்திய புத்தாக்க தயாரிப்புகளை நேர்த்தியாக காட்சிப்படுத்துவதுடன் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற உயர்தர தீர்வுகளை வழங்கும் எமது பொறுப்புறுதிக்கு ஒரு வலுவான சான்றாகவும் திகழ்கிறது. எமது செயல்நடவடிக்கைகளையும் மற்றும் புத்தாக்கத்தையும் நாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில், இப்புதிய மையம் தொடங்கப்பட்டிருப்பது ஜிஎம்-ன் பயணத்தில் ஒரு பெருமைமிகு தருணமாகும்” என்று கூறினார்.

பாலிவுட் நடிகர் திரு. சுனில் ஷெட்டி கலந்து கொண்டு சிறப்பித்த இத்திறப்பு விழா நிகழ்வில் தொழில்துறையின் முக்கிய தலைவர்கள் மதிப்புமிக்க விருந்தினர்கள் மற்றும் ஊடகத்துறையின் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை சுற்றி பார்க்கவும் ஜிஎம்-ன் தயாரிப்புகளை நேரில் பார்த்து ஆராயவும் மற்றும் மின்சாதன தொழில்துறையில் சமீபத்திய போக்குகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மதிப்புமிக்க கண்ணோட்டங்களை பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பை பெற்றார்கள்.

ஜிஎம் மாடுலர் நிறுவனத்தின் புத்தாக்க அணுகுமுறை மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர்தரம் குறித்து தனது பாராட்டையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய திரு. சுனில் ஷெட்டி, “ஜிஎம் மாடுலர் பிராண்டுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்படுவது திருப்தியளிக்கும் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்து வருகிறது. இந்த பிராண்டு வளர்ந்து வருவதையும், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்ற தொடர்ந்து புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண்பது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது உயர்நேர்த்தி மற்றும் புத்தாக்கம் மீது ஜிஎம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இந்த புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ஒரு நல்ல சான்றாகும். இத்தகைய உயர்தரங்களை நிறுவியிருக்கிற மற்றும் இத்தொழில்துறை மட்டுமின்றி உலகெங்கிலும் ஆழமான தாக்கத்தை உருவாக்கியிருக்கிற ஒரு ‘மேக் இன் இந்தியா’ பிராண்டை காண்பது உண்மையிலேயே பெருமிதமளிக்கும் தருணமாகும்” என்று குறிப்பிட்டார்.

2002-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜிஎம், இல்லங்களுக்கான மின்சாதன தீர்வுகள் பிரிவில் எப்போதும் முன்னணி வகித்து வந்திருக்கிறது; சந்தையின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி திருப்தியளிப்பதில் சாதித்திருக்கிறது. இந்தியாவில் சுவிட்சுகளுக்கான மிகப்பெரிய தயாரிப்பாளராக திகழும் ஜிஎம், பல புரட்சிகரமான தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. புதிய தலைமுறை சுவிட்சுகள் இல்லங்களுக்கான ஆட்டோமேஷன் சாதனங்கள், புளூடூத் மியூசிக் பிளேயர்கள், எல்இடி ஒளி விளக்குகள், மின்விசிறிகள் மற்றும் சாதனங்கள் ஆகியவை இதன் தயாரிப்புகளது தொகுப்பில் சிலவாகும். இதன் புத்தாக்க தயாரிப்புகள், இந்நிறுவனத்தின் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையின் திறன்மிக்க செயல்பாடுகளின் விளைவாகும். அத்துடன் அனுபவமும், அர்ப்பணிப்புமிக்க வடிவமைப்பு குழுவினரின் பங்களிப்பு இந்த புத்தாக்கங்களுக்கு பெரிதும் துணை நிற்கின்றன. இந்நிறுவனத்தின் மிக நவீன உற்பத்தி தொழிலகம், உயர்தரத்திலான தயாரிப்புகளை தயாரிக்கும் திறன் கொண்ட உயர்தர எந்திரங்களுடன் 2.5 இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட வளாகத்தில் அமைந்திருக்கிறது.

அதிக தகவலை அறிய கீழ்கண்ட முகவரியில் அமைந்துள்ள புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டருக்கு வருகை தரவும்: ஜிஎம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், பிளாக் எண். 4 & 5, தரைதளம், பிரெஸ்டிஜி சக்ரியா மெட்ரோபொலிடன், மவுண்ட் ரோடு, சென்னை.

 

Faceinews.com