ஸ்பைன் ரீசார்ஜ்: 2024 செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை வழங்கும் முதுகு மற்றும் கழுத்து ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஸ்பைன் ரீசார்ஜ்: 2024 செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை வழங்கும்

முதுகு மற்றும் கழுத்து ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

• இசையும், நகைச்சுவையும் இணைந்த இனிய மாலைப்பொழுது!

சென்னை, 12 செப்டம்பர் 2024: 2024 செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று சென்னை மாநகரின் அண்ணா நூலக கலையரங்கத்தில் நகைச்சுவை, இசை மற்றும் முதுகு மற்றும் கழுத்து நலவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்குகிற “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற தனிச்சிறப்பான மாலைப்பொழுது நிகழ்விற்கு காவேரி மருத்துவமனை உங்களை வரவேற்கிறது.

இந்த ஆர்வமூட்டும் நிகழ்வானது பொழுதுபோக்கையும், ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வையும் கலந்து வழங்கும். பிரபல காமெடியன் படவா கோபி வழங்கும் ஸ்டாண்டு-அப் காமெடி திரைப்பட பின்னணி பாடகர் திவாகர் மற்றும் ரோஷினி வழங்கும் பேரணி இசை நிகழ்ச்சி கோபியின் மைம் நிகழ்ச்சி மற்றும் சாக்கியம் வழங்கும் நடனம் ஆகியவை இந்த நிகழ்வை இனிய மாலைப்பொழுதாக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் ஆக்கவிருக்கிறது.

உலகளவில் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதற்கான 2-வது மிகப்பொதுவான, முதன்மையான காரணமாக இருப்பது முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகளே. இந்தியாவில், உலக சராசரியைவிட அதிகமாக அதாவது 66% நபர்களுக்கு இப்பிரச்சனை இருக்கிறது. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிவேகமான வாழ்க்கைமுறை இருந்துவரும் இக்காலகட்டத்தில் தவறான உடல் தோரணை, உடற்பருமன், உடல் உழைப்பற்ற சோம்பேறி தனமான வாழ்க்கை மற்றும் பணியில் திருப்தியின்மை, மனஅழுத்த அளவு, பயம் கலந்த கலக்கம் மற்றும் மனச்சோர்வு போன்ற உள-சமூகவியல் காரணிகள் இதற்கான பொதுவான காரணங்களாக இருக்கின்றன. முதுகு மற்றும் கழுத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு இயன்முறை சிகிச்சை, அக்குபஞ்சர், ஆயுர்வேதா, மசாஜ் சிகிச்சை, யோகா மற்றும் இயற்கை வைத்தியங்கள் என பல வழிமுறைகளில் சிகிச்சையை வழங்குவதில் மருத்துவர்கள் உட்பட பல்வேறு நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில நேரங்களில் பொதுமக்கள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர் மற்றும் தவறான வழிகாட்டல்களை பெற்று அவதிப்படுகின்றனர். முதுகு அல்லது கழுத்து வழியாக அவதிப்படும் நபர்களுள் 5% மட்டுமே உண்மையில் அறுவைசிகிச்சை தேவைப்படும். மேற்குறிப்பிட்ட சிகிச்சைகள் அனைத்துமே அவைகளுக்கான பலன்களையும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் பக்க விளைவுகளையும் கொண்டிருக்கின்ற நிலையில் இத்தகைய பிரச்சனைகளுக்கான சிகிச்சை தொடர்பான சரியான விளக்கத்தை வழங்கி தவறான எண்ணங்களை மக்கள் மனதிலிருந்து நீக்குவதற்காக ஒரு அமைவிடத்தில் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க நாங்கள் விரும்பினோம்.

சர்வதேச அளவில் சிறப்பு பயிற்சி பெற்ற, அனுபவமிக்க அறுவைசிகிச்சை நிபுணர்களுக்காக புகழ்பெற்றிருக்கும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட், முதுகுத்தண்டு பராமரிப்பு மீது நிபுணத்துவமான கண்ணோட்டங்களையும், விளக்கங்களையும் வழங்கி தெளிவுபடுத்தும். முதுகு மற்றும் கழுத்துவலி மேலாண்மை குறித்து பொதுவாக நிலவுகிற தவறான கருத்துகளை அகற்றும் அதே வேளையில், இப்பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கான உடற்பயிற்சிகள், உடல்தோரணையை சரிசெய்வதற்கான தீர்வுகள், சிகிச்சை விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றை வழங்குவதோடு இதிலுள்ள சவால்கள் பற்றியும் இந்தியா முழுவதிலுமிருந்து வருகை தரும் மருத்துவ நிபுணர்கள் விவாதிப்பார்கள்.

உங்களது ஸ்பைன் ரீசார்ஜ் செய்யவும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்தவும் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.

நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: செப்டம்பர் 21, 2024
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: அண்ணா நூலக கலையரங்கம்

அதிக தகவலைப் பெற முன்பதிவு செய்ய, தயவுசெய்து விஜயம் செய்க:
[Kauvery Spine Recharge] (https://www.kauveryhospital.com/spine-recharge) அல்லது 044 4000 6000 என்ற எண்ணை தொடர்பு கொள்க.

Faceinews.com